For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வேளை என் கணவருக்கு கிடைத்திருந்தால்.. என் வாழ்க்கையே மாறியிருக்கும்.. மீனா உருக்கமான பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: என் கணவருக்கு யாராவது உறுப்பு தானம் செய்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது என நடிகை மீனா உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற 10 வயது மகள் உள்ளார். இவரும் நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீனாவின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. இது ஜிஹாதிகளின் கொடூர செயல்.. கொதித்தெழுந்த நடிகை கங்கனா ரணாவத்சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து.. இது ஜிஹாதிகளின் கொடூர செயல்.. கொதித்தெழுந்த நடிகை கங்கனா ரணாவத்

கொரோனா

கொரோனா

கொரோனாவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் மீண்ட மீனா கணவர் வித்யாசாகருக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த போது அவரது இரு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நுரையீரல்

நுரையீரல்

இந்த நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாததால் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலழிந்துவிட்டது. இதையடுத்து மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரின் இறப்பால் மிகவும் நிலைக்குலைந்த மீனாவை அவரது தோழிகளான கலா மாஸ்டர், ரம்பா, சங்கீதா, சங்கவி உள்ளிட்டோர் தேற்றி வருகிறார்கள்.

40 நாட்களுக்கு பிறகு

40 நாட்களுக்கு பிறகு

40 நாட்களுக்கு பிறகு தற்போதுதான் மீனா வீட்டை விட்டு மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் கணவர் வித்யாசாகர் கடவுளாக இருந்து உங்கள் குடும்பத்திற்கு துணை நிற்பார் என்றும் ரசிகர்கள் நெகிழ்ச்சியாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் நடிகை மீனா உடல் உறுப்பு தானம் குறித்து ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

உயிர் காப்பாற்றும்

உயிர் காப்பாற்றும்

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு உயிரை காப்பாற்றுவதைவிட வேறு எதுவுமே சிறந்த விஷயம் கிடையாது. அதிலும் உடல் உறுப்பு தானம் என்பது உயிரை காப்பாற்றும் உன்னதமான ஒரு விஷயம் ஆகும். நாள்பட்ட இணை நோய்களால் அவதிப்பட்டு வரும் பலருக்கு வாழ்க்கை கிடைக்க மறு வாய்ப்பாக இது அமையும்.

குடும்பத்தினர்

குடும்பத்தினர்

ஒரு வேளை எனது கணவருக்கும் யாராவது உறுப்பு தானம் செய்திருந்தால் என் வாழ்க்கையே மாறியிருந்திருக்கும். ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம் 8 பேரை காப்பாற்றும். அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். இது உடல் உறுப்பு தானம் கொடுப்பவர்களுக்கும் பெறுபவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே இருக்கும் விஷயம் கிடையாது. உற்றார், உறவினர், குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட விஷயமாகும்.

மீனா உருக்கம்

மீனா உருக்கம்

இன்று நான் என்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி மொழி எடுக்கிறேன். இதுவே நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவின் இந்த உடல் உறுப்பு தானத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் அவரது செயலால் இன்னும் சிலர் ஈர்க்கப்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தால் பலருக்கு வாழ்க்கை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

English summary
Actress Meena Sagar post about organ donation and she pledged to donate the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X