ஒரு தலை காதலால் அடி வாங்கிய ராமராஜன்.. எங்கள் பிரிவுக்கு இதுதான் காரணம் மனம் திறந்த நளினி
சென்னை: நடிகை நளினி முதல் முறையாக நடிகர் ராமராஜனை பிரிவதற்கான காரணத்தை பற்றி பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
வெள்ளித்திரையில் இருந்து தற்போது சின்ன திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நளினியின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகை நளினி ராமராஜனை என்ன காரணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்று செய்தி பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.

நளினியின் குடும்பம்
1980 களில் தமிழ், மலையாளம் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்த நளினி 1987-ல் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நளினி கூட பிறந்தவர்கள் 8 பேராம். அதில் நளினி இரண்டாவது ஆக அவருடைய வீட்டில் பிறந்து இருக்கிறார். அவருடைய தந்தை நடன இயக்குனராகவும், அவருடைய தாய் நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். ரத்தத்திலேயே நடனம் இருப்பதாலோ என்னவோ இவர் திரைப்படங்களில் நடனத்தில் மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தொடரும் நடிப்பு
நடிகை நளினிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து தற்போது இருவருமே திருமணம் முடிந்து அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் வெள்ளி திரையிலிருந்து சின்ன திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். கலர்ஸ் தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பான வள்ளி சீரியலிலும் இவர் கதாநாயகியின் பாட்டியாக நடித்திருப்பார். காமெடியாகவும் குணசித்திர வேடத்திலும் இவரை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பால் இப்ப வரைக்கும் உள்ள ரசிகர்களையும் இவர் கவர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் 2000 ஆண்டில் இவர் நடிகர் ராமராஜனை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் ராமராஜனை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஒரு தலை காதல் திருமணம்
ராமராஜன் உதவி இயக்குனராக இருக்கும் போது நடிகை நளினியின் மீது ஒரு தலை காதலாக இருந்தாராம். இந்த விஷயம் நளினி குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் ராமராஜனை பிடித்து அடித்திருக்கிறார்கள். இதனால் நளினி தமிழ் திரை துறையில் இருந்து விலகி இருந்தாராம். பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்த அவர் ராமராஜனை திருமணம் செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் நன்றாகவே போய்க் கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகியது.

ஜோசியம் தான் காரணமாம்
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் நான் திருமணம் ஆகி சில வருடங்களுக்குப் பிறகு, என்னுடைய தாய் ஜோசியரை பார்ப்பதற்காக அழைத்து சென்றிருந்தாராம். அப்போது ஜோசியத்தில் திருமணம் ஆகி சில ஆண்டுகளில் இவர்கள் பிரிந்து விடுவார்கள் என சொன்னார்களாம். அதே போலவே பலரும் பேசினார்களாம். அதனால் சண்டை போட்டு பிரிய வேண்டாம் என்பதாலே
நாங்களே சந்தோஷமாக பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து உண்மையான காரணத்தை வெளியே சொல்லாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்திக் கொண்டிருக்காமல் இத்தனை வருடம் கழித்தும் விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications