ஓணம் பண்டிகைக்கு ஷிவானி கொடுத்த பம்பர் பரிசு...இந்த முறையாவது எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா..!!??
சென்னை: இன்ஸ்டாகிராம் இளசுகளின் கனவு கன்னி ஷிவானி ஓணம் பண்டிகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரது ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியாக தனது அடுத்த படத்தை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஷிவானியின் கேரக்டரை பெரியதாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்களின் ஏமாற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, தனது அடுத்த படத்தில் முழு நேர கதாநாயகியாகவே களம் இறங்க உள்ளார்.
எட்டு தோட்டாக்கள், ஜூவி, ஜூவி 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றி உடன் ஷிவானி இணைந்துள்ளார். இந்தப் படமாவது ஷிவானிக்கு கை கொடுக்குமா..!!?என்று ஷிவானி ரசிகர்கள் எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர்.

சீரியல் ஷிவானி
விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷிவானி தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் சரவணன் மீனாட்சி, ஜோடி நம்பர் ஒன் ஃபன், ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, என்று அடுத்தடுத்து பல சீரியல்களில் கமிட் ஆகி வெற்றிகரமான சீரியல் பிரபலமாக கலக்கி கொண்டிருந்தார்.சில சீரியல்களில் துணைக் கதாபாத்திரத்தில் இவர் நடிக்க ஆரம்பித்தாலும், இவரது பெர்பாமன்ஸ் காகவே அந்த பாத்திரத்தை முக்கிய கதா பாத்திரமாக மாற்றிய சீரியல்களும் உண்டு. அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார்.

இன்ஸ்டா புயலாக மற்றொரு முகம்
சீரியல்களில் குடும்பப் பெண்களுக்கென்று அளவெடுத்து வைத்தவர் போல் அம்சமாக நடித்து வந்த ஷிவானி, இன்ஸ்டா ஃபீவரால் கொஞ்சம் சூடாகித் தான் போனார். சின்னத்திரையை விட இன்ஸ்டாவில் ஷிவானி போடும் போட்டோவிற்கென்று தனி ரசிகர் கூட்டம் பெருகியது. ஷிவானியும் அவரது ரசிகர்களை ஏமாற்றாமல் அவ்வப்போது ஏதேனும் போட்டோக்களை வஞ்சனை இல்லாமல் பதிவிட்டும் வந்தார். சின்னத்திரையை விட போட்டோ ஷூட் மூலம் சோசியல் மீடியாக்களில் கல்லா கட்டுவதே மேல் என்று நினைத்தாரோ..! என்னவோ..!? இன்ஸ்டாகிராமிலே பெரிய அளவிற்க்கு ஆக்டிவேட்டாக இருந்து வந்தார்.

சினிமாவில் ஷிவானி
சமூக வலைதளங்கள் மூலம் சந்து பொந்தெல்லாம் ஃபேமஸான இவரை தேடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது பெர்பார்மன்ஸ் ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் பேசப்பட்டது.இருந்தாலும் நிகழ்ச்சி கலந்துகொண்டு பெற்ற பிரபலம் காரணமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.கமலஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக இவர் நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்ததும் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகினர்.ஆனால் விக்ரம் படத்தில் ஷிவானியின் கதாபாத்திரம் பெரிதளவிற்கு இல்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான்.அதன் பின் வீட்ல விஷேசங்க படத்தில் நடித்திருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு அது மன நிறைவை தரவில்லை என்றே சொல்லலாம்.

புல் டைம் ஹுரோயின்
ஏமாற்றத்தை எல்லாம் ஈடு கட்டும் பொருட்டு விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் ஷிவானி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி பரவியது. அதைத் தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன் படத்திலும் ஷிவானி கமிட்டாகி உள்ளார். இரண்டு படங்களிலும் ஷிவானியின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில். தான் மட்டும் கதையின் நாயகியாக நடிக்கும் படத்தின் அப்டேட் கொடுத்து அவரது ரசிகர்களை ஏக்கத்தை தீர்த்துள்ளார் ஷிவானி. பெரிய அளவிற்கு வெற்றி இல்லை என்றாலும் எந்தவித தோல்வி படமும் இல்லாமல், நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசம் காட்டி சக்சஸ் நாயகனாக வலம் வரும் வெற்றியுடன் இணைந்து ஷிவானி கதாநாயகியாக நடிக்கும் "பம்பர்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். ஒரே நேரத்தில் தமிழிலும் மலையாளத்திலும் எடுக்கப்படும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓணம் பண்டிகை வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஷிவானியின் மலையாளத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications