வலிமையால் வம்பில் மாட்டிய ஸ்ரீநிதி.. பேசவே பயமாக இருக்கிறது. . கண்கலங்கி கதறும் நடிகை
சென்னை: வலிமை திரைப்படத்தை பற்றி தன்னுடைய கருத்துகளை ஸ்ரீநிதி வெளியிட்டதால் சமூக வலைத்தளத்தில் அதிகமான மிரட்டல் வருவதாக ஸ்ரீநிதி கூறியிருக்கிறார்.
Recommended Video
வலிமை திரைப்படத்தைப் பற்றிய ரிவ்யூ கூறிய சின்னத்திரை நடிகைக்கு ரசிகர்கள் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை அனுப்பி வருகிறார்களாம்.

வெளியானது வலிமை
அஜித் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வரும் வலிமை திரைப்படம் தற்போது பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இரண்டு வருட காலமாக உழைத்த உழைப்பிற்கு தற்போது ரிசல்ட் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் திருவிழாவை போன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் ஒரு பக்கம் திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்ததும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய கொண்டிருக்கிறது. வலிமை திரைப்படம் வெளியான முதல் நாளே பல்வேறு திரைப்படங்களில் கலவரங்களும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து திரைப்படத்தை பற்றி பல்வேறு தரப்பினரும் ரிவ்யூ கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

முதல் நாள் ஷோ
முதல் நாளில் முதல் ஷோ பார்ப்பதற்காக ரசிகர்கள் முந்தைய நாளிலிருந்தே காத்துக்கிடந்து திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர். விடியற்காலையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் பலர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்கள் பலர் திரைப்படத்தைப் பற்றி கேள்விகளை ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி தன்னுடைய தோழி சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் நடித்திருப்பதால் அவரோடு படத்தை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். செய்தியாளர் ஒருவர் திரைப்படத்தை பற்றி ஸ்ரீநிதி இடம் கேள்விகளை கேட்டு இருக்கின்றனர்.

ஸ்ரீ நிதியின் கருத்து
செய்தியாளர்கள் யாரையும் விட்டுவைக்காமல் அனைத்து ரசிகர்களிடமும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது போலத் தான் சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி இடமும் கேள்விகளை கேட்டிருந்தனர். அதற்கு ஸ்ரீநிதி வலிமை திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்றால் பொறுமை வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் கொதித்தெழுந்து ஸ்ரீநிதிக்கு எதிராக கருத்துக்களை அனுப்பி வருகின்றனர். அதில் பலர் ஸ்ரீநிதி விஜய் ரசிகையாக இருக்கும். அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்கிறார் என்று கோபத்தோடு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்களாம்.

உருக்கமான வார்த்தைகள்
மீடியாவில் ஸ்ரீநிதி பேசிய வார்த்தைகள் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அஜித் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தோழி சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்து கூறி போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்ட்டில் கூட ரசிகர்கள் பலர் இவரை கலாய்த்து தள்ளி இருந்தனர். இந்த நிலையில் அன்று என்ன நடந்தது என்று பற்றியும், தன்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பும் ரசிகர்களுக்கு இனி இந்த மாதிரி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியும் ஸ்ரீநிதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதற்கும் பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதில்களாக அனுப்பி வருகிறார்கள். இதுதான் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வரும் வீடியோவாக இருந்து வருகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications