அப்பா மீது சத்தியம் செய்த அக்ஷரா..காரணம் இதுதானா??
சென்னை: கோபத்தின் உச்சத்தில் அக்ஷரா செய்த செயல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ராஜுவுக்கும், அக்ஷராவுக்கு ஏற்பட்ட தகராறில் அக்ஷரா பேசிய வார்த்தையை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொண்ட அக்ஷராவுக்கு அட்வைஸ் குவிந்து வருகிறது.

விளையாட்டை தொடங்கிய ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஒரு சில பிரச்சனைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறது. ஒவ்வொரு சீசனிலும் இது தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஐந்தாவது சீசனில் தற்போதைய போட்டியாளர்கள் நடந்துகொள்வது ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. இதுவரைக்கும் விளையாட்டுகளில் அமைதியான முறையிலும், கலகலப்பாகவும் விளையாடி வந்த ராஜு தற்போது விளையாட்டை வெறித்தனமாக விளையாடத் தொடங்கி உள்ளார். அதனால் பாதிக்கப்பட்டுள்ளது அக்ஷரா தான்.

ராஜுவின் பஞ்ச் வசனம்
நேற்றைய எபிசோட்டில் அக்ஷரா தன்னுடைய விளையாட்டை எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று வெறித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது நான் என்னுடைய விளையாட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடுவேன் என்று ராஜுவும் மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். என்னிடம் பாசமாக கேட்டால் கூட நான் விட்டுவிடுவேன் ஆனால் அதிகாரத்தில் கேட்டால் நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என்று பஞ்ச் வசனம் பேசி ராஜு பட்டையைக் கிளப்பிவிட்டார்.

காரசாரமான வாக்குவாதம்
இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து ராஜுவை பார்க்கும் போது என்னுடைய அண்ணனைப் போன்று உள்ளது என்று பாசமாகவும், உருக்கமாகவும் இருந்து அக்ஷரா நேற்றைய எபிசோடுகளில் இனிமேல் உன் முகத்தை நான் ஒருபோதும் பார்க்கவே மாட்டேன் என்று காரசாரமாக கூறியுள்ளார். ரசிகர்கள் அண்ணா என்று கூறிய வாயால் இப்படி எல்லாம் பேசலாமா என்று அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல் அக்ஷரா கோபத்தின் உச்சத்தில் செய்வதை பார்த்து பல ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.

அக்ஷராவின் சத்தியம்
போன வாரத்தில் பாவனி மற்றும் ராஜூ இடையே ஏற்பட்ட பிரச்சனையை பற்றி கமல் பேசியது போல இந்த வாரம் ராஜீ மற்றும் அக்ஷரா இடையில் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி பேசுவாரா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை வீசிக்கொண்டிருக்கும் அக்ஷராவை ஆரம்பம் முதலே தட்டி வைக்காததால் தான் இவர் இந்த அளவிற்கு வந்துள்ளார் என்று ரசிகர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜுவின் மீது கோபத்தில் தன்னுடைய தந்தையின் மீது சத்தியம் செய்து என் வாழ்க்கையில் உன் முகத்தை பார்க்கவே மாட்டேன் என்று கூறியதை பார்த்து பல மீம்ஸ்க்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications