மதங்களைத் தாண்டிய மனித உணர்வு..அமீர்க்காக நண்பரிடம் சண்டை போட்ட அஷ்ரப்..காரணம் இதுதானா??
சென்னை: ஜாதி மதங்களை தாண்டி அமீருக்கு அஸ்ரப் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ஒருவர் உதவி செய்கிறார் என்று தெரிந்தால் மற்றவர்கள் எவ்வளவு தூற்றுவார்கள் என்பது அஷ்ரப் விஷயத்தில் உண்மையாகி உள்ளது.
அமீர்க்காக நெருங்கிய நண்பரிடமும் அஷ்ரப் சண்டை போட்டுள்ளாராம்.

அப்போ அப்படி. ..இப்போ இப்படி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் அமீரை பலருக்கும் ஒரு டான்ஸ் மாஸ்டராக தெரியும். ஆனால் ஆரம்பம் முதல் இந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு ப்ளேபாய் ஆக நடந்து கொண்டு வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் இவருடைய சொந்த வாழ்க்கையைப்பற்றி தற்போது வெளியே தெரிந்ததும் இவர்மீது அனுதாபம் அலைகள் அதிகமாக வீசி வருகிறது. என்னதான் சிரித்து பேசி சகஜமாக இவர் விளையாடி வந்தாலும் இவருக்குள் இப்படி ஒரு சோகமா என்று ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்தான் இந்த டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துக்களும் அதிகமான ரசிகர்கள்.

இனம் புரியாத பாசம்
தன்னுடைய தாயையும், தந்தையும் இழந்த பிறகு தனக்கு பாதுகாவலராக அஷ்ரப் குடும்பத்தினர் தன்னை அரவணைத்து கொண்டதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் அமீர் கூறியிருந்தார் அதற்குப் பிறகுதான் அனைவருக்கும் யார் அந்த அஷ்ரப் என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரான அஷ்ரப், இவர் மீது கொண்ட இனம்பரியாத பாசத்தின் காரணமாக பல்வேறு தியாகங்களையும் செய்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு தற்போது அஷ்ரப் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

வளர்ச்சிக்கு தொடங்கிய முதல் முயற்சி
ஜாதிக்காகவும், மதத்திற்காகவும் பலர் அடித்துக்கொண்டு திரியும் போது அதையெல்லாம் தாண்டி ஒரு கிறிஸ்தவ பையனை தன்னுடைய வளர்ப்பு பயனாக வளர்த்து அவருக்காக சமுதாயத்தில் பலரிடமும் சண்டையிட்டு இப்ப வரைக்கும் அவரை பாதுகாத்து கொண்டு வருவது தெரிந்ததும் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் அஷ்ரப் ,அமீர்க்காக எதையாவது செய்ய வேண்டும் என்று அவருடைய ஆசைப்படி அவருக்கு டான்ஸ் ஸ்கூல் வைத்து கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் அவர் ஊட்டியில் உள்ள ஒரு இடத்தில் குத்தகைக்கு எடுத்து தன்னுடைய சொந்த செலவில் ஸ்கூல் வைத்து கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஸ்கூலை மூன்று மாதங்களுக்குள் சீல் வைத்து விட்டார்களாம். இதனால் அமீர் அதிக அளவில் மனது உடைந்து போய் இருக்கிறார்.

நண்பனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு
அடுத்ததாக அமீர் மனதை தேற்றி ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று ஃப்ரீயாக இருக்கும் இடத்தை பார்த்ததும் அங்கே 20 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து அஷ்ரப் மீண்டும் அமீருக்கு கொடுத்துள்ளார். அதற்கான செலவுகளை எல்லாம் அஷ்ரபின் மனைவிதான் கொடுத்தாராம். ஆனால் அங்கேயும் ஒரு சில மாதங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அருகில் இருப்பவர்கள் அதிகமாக சவுண்ட் வெளியாகிறது அது எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அந்த ஸ்கூலின் கீழே இருந்தவர்கள் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்களாம். அதுவும் கம்ப்ளைன்ட் கொடுத்தது அஷ்ரபின் நெருங்கிய நண்பர் தான். இவருடைய பிஸ்னஸ் நண்பராகவும் இருந்துள்ளார். அவர் இவருக்கு எதிராக செயல்பட்டதனால் அவரிடம் சண்டை போடும் நிலையில் கூட அஷ்ரப் இருந்துள்ளார். அதற்குப் பிறகு கூட அந்த இடத்தை எவ்வளவோ சரி செய்தும் அவர்கள் அஷ்ரப் மற்றும் அமீர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்களாம்.
Recommended Video

இது யாராலயும் முடியாது. .
தன் கூடப்பிறந்தவர்களையே கண்டுகொள்ளாமல் சொத்துக்காகவும் பணத்துக்காகவும் கொலை வரைக்கும் போய்க் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், யார் என்றே தெரியாத ஒரு நபருக்காக பாசத்திற்கு கட்டுப்பட்டவர் செய்திருக்கும் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. அஷ்ரப் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தினரும் அமீர் மீது காட்டிய பாசத்தின் காரணமாக தான் இந்த அளவிற்கு செய்துள்ளனர். அதனால்தான் அமீரால் இந்த அளவிற்கு வாழ்க்கையில் ஜெயிக்க முடிந்திருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அமீர் வாழ்க்கையில் அஷ்ரப் ஒரு கடவுள்தான் என்று கூறிவருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications