கலாய்த்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்க அஸ்வினுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு...ஆரம்பமே களைக்கட்டுதே
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான அஸ்வினுக்கு தற்போது மீண்டும் புது வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் புது வாய்ப்புக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடரும் தடங்கல்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். வெள்ளித்திரையில் இவர் ஆரம்பத்தில் செய்த செயலால் தற்போது தொடர்ந்து முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு வருகிறது. இவருடைய முதல் திரைப்படமான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் தற்போதுதான் வெளியாகி இருந்தது.

வெளியான திரைப்படம்
முதல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய வார்த்தைகள் இவருக்கு ஆப்பு வைக்கும் விதமாக அமைந்துவிட்டது. எதார்த்தமாக பேசுகிறேன் என்று ஏதேதோ பேசி இவர் நெட்டிசன்களின் வாயில் வசமாக மாட்டிக் கொண்டார். பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய பேச்சுக்கு பலனாக திரைப்படம் வெளியாகுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் கடும் போராட்டத்திற்கு பிறகு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படம் வெற்றி அடையவில்லை இது அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இனி அஸ்வின் வாழ்க்கை அவ்வளவு தான் இனி அவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காது என்று பலர் அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மீண்டும் இவர் ஆல்பம் பாடல்களில் களைகட்ட தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு ஆல்பம் பாடல்கள் பல வெற்றி கொடுத்து ஹிட்டாகி இருக்கிறது. அது போல தற்போதைய பாடலும் வெற்றியடையும் என்பது இவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதுபோல நெட்டிசன்கள் இதையும் வைத்து கலாய்க்க தொடங்கியிருக்கின்றனர்.

வெளியான ட்ரைலர்
அஸ்வின் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான லாஸ்லியா இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர். சுகர் பேபி என்ற பாடலின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஸ்வினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்களாம். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. ஒரு வழியாக தன்னை கலாய்த்துக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு அஸ்வின் தக்க பதிலடி இந்த பாடல் மூலம் கொடுப்பாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications