எழிலுக்கு ஆதரவாக வரும் கோபி... வர்ஷினிக்கு சத்தியம் செய்து கொடுக்கும் ஈஸ்வரி.. இனி நடப்பது இதுதான்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷினி இடம் ஈஸ்வரி எழிலுக்கும் உனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.
அமிர்தாவின் விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்து விட்டால் இனி என்ன நடக்கும் என்று பாக்கியாவும் எழிலும் பயப்படுகின்றனர்.
இனியாவின் படிப்பு விஷயத்திற்காக பாக்கியா இனியாவிற்கு டியூசனில் அட்மிஷன் வாங்கி இருக்கிறார்.

கோபியின் அட்வைஸ்
விஜய் டிவியயில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி எழிலை சந்தித்து பேசி கொண்டிருக்கிறார். அப்போது நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புக என எழில் சொல்ல, கோபி உன்னுடைய கேரியர் ரொம்பவே முக்கியம் உன்னை பத்தி ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் அது உலகம் முழுக்கவும் பேசுவாங்க ஏன்னா உன்னுடைய ஃபீல்டு அப்படி என எழிலுக்கு அறிவுரை கூறிக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

வர்ஷினி அப்பாவின் பிடிவாதம்
அடுத்ததாக பாக்கியா இனியாவுக்காக டியூசன் சென்டர் ஒன்றில் சென்று விசாரித்து 12 ஆயிரம் பணம் கட்டி விட்டு நாளையிலிருந்து அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டு வருகிறார். ஈஸ்வரி, வர்ஷணியின் அப்பாவை சந்தித்து எழிலுக்கு படம் பண்ணி கொடுக்குமாறு பேச அவர் அது மட்டும் முடியவே முடியாது அவன் என் முன்னாடியே என் பொண்ணு கிட்ட அப்படி கோபமாக பேசுகிறான். நீங்க வந்து பேசுனதுனால தான் நான் சரி என்று ஒத்துக்கிட்டேன் ஆனால் அவன் இவ்வளவு திமிராக இருக்கிறான் என்று கோபமாக பேசுகிறார்.

ஈஸ்வரியின் சமாதானம்
எனக்கும் அவன் படத்தை பண்ண கூடாதுன்னு எந்த எண்ணமும் கிடையாது. படம் பாதியில் நிறுத்தப்படுவதால் எனக்கும் நஷ்டம்தான். ஆனால் இந்த வயசுல இவ்வளவு கோபம் இருக்கக் கூடாது. என் பொண்ணு அவனை ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே! அதை விட்டுட்டு வேற ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஏன் முன்னாடியே சொன்னா என்ன அர்த்தம்? என கேட்க ஈஸ்வரி அவன் தெரியாம அப்படி பேசிட்டான் கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் நான் அவன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன் என சொல்கிறார். அதற்கு முதலில் அவனை என்கிட்ட வந்து பேச சொல்லுங்க என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல சொல்லுங்க என புரொடியூசர் கூறுகிறார்.

சத்தியம் செஞ்சிட்டாங்களே
பிறகு ஈஸ்வரி வர்ஷினியிடம் உனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என ஈஸ்வரி சத்தியம் செய்து கொடுக்கிறார். எழிலிடம் அவனது வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட எழில் நீ ஒன்னும் கவலைப்படாதம்மா நீ என் கூட இருந்தா போதும் எல்லாத்தையும் நான் கடந்து மேலே வந்து விடுவேன் என கூறுகிறார். அமிர்தா விஷயம் மட்டும் வீட்டுக்கு தெரிஞ்சா நீயும் நானும் மட்டும்தான் இந்த வீட்டில் இருப்போம். அப்படி இல்லன்னா நம்ம ரெண்டு பேரையும் வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள் என பாக்யா வருத்தப்பட, எழில் பாத்துக்கலாம் என்னதான் நடக்கிறது என்று பாக்யாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

டியூசனுக்கு போவாரா
அடுத்ததாக பாக்கியா கிச்சனில் இருக்கும் போது அங்கே வரும் மாமனாரிடம் இனியாவுக்காக டியூஷன் பீஸ் கட்டிய ரசீதை கொடுத்து அவளை நாளிலிருந்து டியூசன் கொண்டு போய் விடுங்க, நீங்களே சேர்த்து விட்ட மாதிரி இருக்கட்டும். நான் சேர்த்து விட்டதா சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் அதற்கும் அவர் ஒரு பிரச்சனை பண்ணுவார் என பாக்யா சொல்ல ராமமூர்த்தியும் சரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications