"பல வருடங்களாக குழந்தை இல்லை” ஏக்கத்தில் விஜய் டிவி கதாநாயகன்..“பிறந்தது குட்டி இளவரசி”
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான தகவல்களை மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார்.
திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை இல்லாததால் இவர்கள் பிரிந்து விடுவார்கள் என்று நினைத்து இருந்த நேரத்தில் தற்போது நவீனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை குறித்தும் அந்த குழந்தைக்காக தன்னுடைய மனைவியான கிருஷ்ணகுமாரி பட்ட கஷ்டங்களை குறித்தும் நவீன் பீல் பண்ணி பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய மிமிக்ரி திறமையால் ரசிகர்களை கவர்ந்த நவீன் டான்ஸராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்துள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் இவர்தான் டைட்டில் ஜெயிப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசியில் இவர் டைட்டில் ஜெயிக்காதது கொஞ்சம் ஏமாற்றத்தை தான் கொடுத்திருந்ததாம். ஆனாலும் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

மிமிக்கிரி திறமை
நவீன் 2 வயதாக இருக்கும்போது மிமிக்கிரி எல்லாம் செய்வதற்கு ட்ரை பண்ணி கொண்டு இருந்தாராம். இவர் மிமிக்கிரி செய்வதற்கு காரணமே இவருடைய அப்பாவான முரளிதரன் தானாம். அப்பாவை பார்த்து இவரும் மிமிக்கிரி செய்ததால் பல நிகழ்ச்சிகளுக்கு இவர் சீப் கெஸ்ட் ஆகவும், நடுவராகவும் சென்றிருக்கிறாராம். இவர் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதே மிமிக்கிரி செய்து அனைவரையும் கவர்ந்திருக்கிறாராம். சில நேரங்களில் தன்னுடைய பிரன்ட்ஸ்களை பெண் குரலில் பேசி கலாய்த்து பிராங்க் செய்திருக்கிறாராம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் தான் இவர் கலந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் முதல் சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்வதற்காக ஆட்டிஷனலில் கலந்துகொண்டு ரிஜெக்ட் ஆகி தான் வெளியே வந்து கொண்டிருந்தாராம்.

சர்ச்சையில் பிரபலம்
நவீன் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவர் திவ்யா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த நேரத்தில் கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் செஞ்சி, இவர்களுடைய பிரச்சனை சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த நேரத்தில் கலக்கப்போவது யாரு நவீன் என்று சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது என்றும் சொல்வது அளவிற்கு இவர்களுடைய பிரச்சனை இணையத்தில் பரவிக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு இவர் காதலித்து வந்த கிருஷ்ணகுமாரியை இரண்டாவது திருமணம் செய்துள்ளாராம்.

வந்தாச்சி இளவரசி
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மனைவியோடு இவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருவதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் கூறி இருந்தார். அது மட்டும் அல்லாமல் தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் இருவரும் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றெல்லாம் பலரும் எங்கள் காது படவே பேசி வந்தார்கள், ஆனால் தற்போது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று உருக்கமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அதில் "என் ராணி, என் இளவரசியை பெற்றெடுத்தாள். அன்பே இளவரசி.. அப்பா அம்மா உன்னை எப்போதும் நேசிக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications