பாக்யாவிடம் வில்லத்தனத்தை காட்டத் தொடங்கிய ராதிகா.. மேடையில் பதிலடி கொடுத்த பாக்கியா..இன்றைய அப்டேட்
சென்னை: பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மகா சங்கமத்தில் ராதிகா, வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார்.
முதல் முறையாக பாக்யாவிடம் நேருக்கு நேர் ராதிகா பேசிய பேச்சுக்கு அவார்டு ஃபங்ஷனில் பாக்கியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
பாக்யாவின் இந்த மாற்றம் இன்றைய எபிசோட்டில் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தொந்தரவு செய்த கண்ணன்
விஜய் டிவி பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மகா சங்கமம் இன்றைய எபிசோட்டில் ஆரம்பம் ஆகும்போது, கோபி ராதிகாவை வெறுப்பேற்றும் விதமாக கண்ணனும் ராமமூர்த்தியும் படகில் ஏறி பாட்டு பாடி பாடாய்படுத்தி இருந்தனர். இதனால் கடுப்பான கோபி போட்டை விட்டு கீழே இறக்க சொல்லி இறங்கி விடுகிறார். அதே நேரத்தில் மீனாவும் ஜீவாவும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் போல மீனா இந்த மாதிரி எல்லாம் நாம காதலிக்கும் போது இருந்தது இன்று தான் இதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது இவர்களை தொந்தரவு செய்வதற்கு ஏற்ப கண்ணன் போன் செய்து விடுகிறார்.

இனியாவை காப்பாற்றிய கோபி
கண்ணனை திட்டி மீனா ஃபோனை வைத்தவுடன் ஜீவாவுக்கு கடையிலிருந்து போன் வந்து விடுகிறது. அதனால் அவர் கடைக்கு கிளம்பி விடுகிறார். இதனால் மீனா கடுப்பாக இருக்கிறார். இந்த பக்கம் கொடைக்கானலில் கண்ணன் ஐஸ்வர்யா ஜாலியாக சுற்றி என்ஜாய் செய்து கொண்டிருக்கின்றனர். பாக்கியலட்சுமி குடும்பத்தோடு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். எழில் இவர்கள் அனைவரையும் தனியாக நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா தன்னுடைய ப்ரண்டிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கிறார் .தெரியாமல் கீழே விழப் போகும்போது அங்கே வந்து கோபி இனியாவின் கையை பிடித்து தடுத்து விடுகிறார். கோபி இனியாவிடம் பேசுவதற்காக செல்லும்போது இனியா அவரை முறைத்துக் கொண்டு நிற்கிறார். அங்கே வந்த ஈஸ்வரி அம்மா இனியாவே போக சொல்லிவிட்டு கோபியை திட்டி அனுப்புகிறார்.

கோபத்தின் உச்சியில் ராதிகா
அதே நேரத்தில் ராதிகா தனியாக நடந்து கொண்டிருக்கிறார். இந்த பக்கம் பாக்கியாவும் தனியாக நடந்து வருகிறார். இருவரும் கவனிக்காமல் அருகருகே வந்து இடித்துக் கொள்கின்றனர். ராதிகா பாக்யாவை இப்போ உங்களுக்கு நிம்மதியா? நாங்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று தானே நீங்கள் இப்படி செய்கிறீர்கள். உங்களை கூட நான் ஆரம்பத்தில் நினைத்து பீல் பண்ணி இருக்கிறேன். இனி டீச்சரின் நிலைமை என்னாகும் என்றெல்லாம், நினைத்து என்னுடைய வாழ்க்கையை வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு மோசமானவராக இருப்பிங்க என்பது நான் நினைக்கவில்லை. கோபி சொல்லும் போது கூட நம்பவில்லை இப்போதுதான் உங்களை பற்றி புரிஞ்சிக்க முடியுது என பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

மூர்த்தி கொடுத்த பதிலடி
பாக்கியாவை திட்டுவதை அப்போது அங்கே வந்த மூர்த்தி கேட்டு பாக்கியாவுக்கு ஆதரவாக ராதிகாவை திட்டுகிறார். ராதிகா,பாக்யா கோபியை விட்டுக் கொடுப்பது போல டைவர்ஸ் கொடுத்துவிட்டு, எதற்காக இப்படி கல்யாணத்தில் ரகளை செய்துவிட்டு, இப்ப நாங்க இங்க வந்த இடத்திலும் பிரச்சனை பண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்று கடுப்பில் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மூர்த்தியும் பிடுங்கி தின்ன சோறு கூட செமித்து விடும் ஆனால் இப்படி ஒருத்தங்க வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கையை பிடுங்கி நல்லாவே இருக்க முடியாது என்று சாபம் கொடுக்கிறார் ராதிகாவும் உங்களை எல்லாம் நான் எவ்வளவோ நல்லவங்க என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது உங்களுடைய சுயரூபம் எனக்கு தெரிந்து விட்டது .நீங்க அமைதியாகவே இருந்து எல்லாரையும் ஏமாத்திகிட்டு இருக்கீங்க. இனி நான் என்னுடைய வாழ்க்கையை வாழ போகிறேன் என்று கூறுகிறார் .பாக்யா மூர்த்தியை அழைத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார்.

கோபியின் சமாதானம்
பாக்கியா பேசியதை நினைத்து கோபத்தில் தனியாக அமர்ந்திருந்த ராதிகாவிடம் கோபி வந்து அமர்ந்து இருக்கிறார் .அப்போது எதற்காக கோபி உங்க அப்பா இப்படி நடந்து கொள்கிறார் என்று கூறுகிறார் .அதற்கு கோபி இப்போ புரிகிறதா? நான் எவ்வளவோ சொன்னேன் அல்லவா? எங்க அப்பா எப்படி எல்லாம் என்ன கொடுமைப்படுத்தி இருக்காங்க பார்த்தியா ?நீ கூட அடிக்கடி பீல் பண்ணுவியே! இவ்வளவு பெரிய நல்ல குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டீங்க என்று இப்போது புரிகிறதா? நான் அந்த வீட்ல எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கிறேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.ராதிகா நாம் ஊருக்கு சென்று விடலாம் என்று கூறுகிறார் .அதற்கு இன்று ஒரு நாள் பொறுத்துக்க .அவார்ட் ஃபங்ஷன் முடிந்ததும் வேற ஹோட்டலுக்கு நாம் போய் இரண்டு நாட்கள் நிம்மதியாக இருந்துவிட்டு போவோம் என்று சமாதானப்படுத்துகிறார்.

கோபியின் தவிப்பு
ராதிகாவும் கோபியும் அவார்ட் ஃபங்ஷனுக்கு செல்லும்போது இவர்களை வரவேற்பதற்கு யாரும் இல்லை என்பதால் அப்போதே ராதிகா கோபி இடம் என்ன கோபி இப்படி யாருமே நம்மளை வரவேற்க இல்லையே என்று கேட்கிறார். அதற்கு கோபி இது என்ன பெரிய அவார்ட் பங்க்ஷனா? சும்மா சாதாரண சின்ன பங்க்ஷன் தானே அதான் இப்படி என்று சமாதானப்படுத்தி ராதிகாவை உள்ளே அழைத்து செல்கிறார். அங்கே போனதும் நாம் வேற நண்பனிடம் ராதிகாவை கல்யாணம் முடிப்பதை சொல்லவில்லை இனி என்னவெல்லாம் பிரச்சனை நடக்க போகிறதோ என்று குழப்பத்தோடு இருக்கிறார். ராதிகாவை பற்றி எப்படியாவது சொல்லிவிடலாம் என்று நண்பனின் அருகில் செல்கிறார் ஆனால் அவர் பாக்யாவும் ,குடும்பமும் வரவில்லையா? கோபி என்று கேட்கிறார். அப்போதும் சொல்ல முடியாமல் கோபி திரும்பி வந்து விடுகிறார்.

பாக்யாவின் தத்துவம்
மேடையில் கோபிக்கு அவார்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோபியிடம் பேச சொல்லி மைக் கொடுக்கப்படுகிறது. அதில் தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்னுடைய மனைவிதான் என கோபி பேசுகிறார். அவர் ராதிகாவை பார்த்துக் கொண்டே மைக்கில் பேசிக் கொண்டிருக்கிறார். அதை புரிந்து கொள்ளாத அவருடைய நண்பன் கோபியின் வளர்ச்சிக்கு துணையாக இருந்த அவருடைய மனைவி பாக்யா வை மேடைக்கு அழைக்கிறோம் என்று பாக்யாவை அழைத்து செல்கிறார்கள். பாக்யா ஆரம்பத்தில் வரவில்லை என்று சொன்னாலும் பின்பு செல்கிறார், அங்கு போய் 24 மணி நேரமும் உழைக்கும் கணவர்களுக்கு அவர்கள் கஷ்டப்படக்கூடாது, என்பதற்காக வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொள்ளும் பெண்களுக்கு தான் தெரியும் அதோட வலி என்று பேசுகிறார். இதை பார்த்த ராதிகா கடும் கோபத்தில் இருக்கிறார். மேடையை விட்டு கீழே இறங்கிய பாக்யாவும் ராமமூர்த்தியும் அந்த இடத்தை விட்டு கோபியை முறைத்தபடியே கிளம்புகின்றனர். இதோடு இன்றைய எபிசோடு முடிந்து விட்டது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications