கண்ணம்மாவின் புது சபதம்....மீண்டும் தொடங்கிட்டாங்கப்பா...ஒரு வழியா முடிவு தெரிய போகிறது
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் இந்த வார விறுவிறுப்பான கதைக்களம் மொத்த கதையும் மாற்றி அமைக்கப் போகிறது.
ஒரு சில வாரங்கள் காதல் காட்சிகளோடு வலம் வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மீண்டும் தற்போது கண்ணம்மாவின் புது சபதத்தால் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.

மீண்டும் பழையபடி மாறிய பாரதி
பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரு சில வாரங்கள் பாரதி திருந்தியது போல இருந்தாலும் தற்போது மீண்டும் அவருடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். இவருக்கு வேற வேலையே இல்லையா?? அல்லது இப்படித்தான் எப்போதும் இருப்பாரா?? என்று நெட்டிசன்கள் பாரதியை கலாய்த்து வருகிறார்கள். என்ன தான் இவருக்கு புரியும்படி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் பாரதி மீண்டும் தன்னுடைய முடிவில் வந்து நிற்பதை பார்த்ததும் எப்போதும் போல நெட்டிசன்கள் பாரதியை சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

நீதிமன்றத்தின் அறிவுரை
பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்ததால் இவர்கள் இருவரும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. இதில் ஆரம்பத்திலிருந்து நடக்கும் செயல்களால் கண்ணம்மாவின் மீது தவறு இல்லை என்பதை உணர்த்திக் கொண்டிருக்கும் செயல்களால் பாரதி திருந்தி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பாரதியின் செயல்பாடு வழக்கம்போல வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் பெட்டியை தூக்கிய கண்ணம்மா
கடந்த வாரம் முழுக்க இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் எப்போதும் போல கண்ணம்மாவை நான் தப்பு செய்தேன் தெரியாமல் செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள் என்று கூறியதும் கண்ணம்மா வீரமாக வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார். இன்றைய புரொமோவில் கண்ணம்மா மீண்டும் பாரதியின் வீட்டிற்கு ஒரு பெட்டியோடு வந்திருக்கிறார். பாரதியிடம் அவருடைய பொருள்கள் ஒப்படைத்துவிட்டு இதில் உங்களுடைய பொருள்கள் எல்லாம் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

கண்ணம்மாவின் மீண்டும் சபதம்
பொருள்களை எல்லாம் மீண்டும் கொண்டுவந்து கொடுத்ததை பார்த்த சௌந்தர்யா, அப்போ எல்லாத்தையும் முடித்து விடலாம் என்று நினைக்கிறாயா?? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு நான் எந்த தப்பும் செய்யவில்லை, என் குழந்தையின் அப்பா யார் என்பதை நான் அனைவருக்கும் நிரூபிப்பேன் என்று கண்ணம்மா மீண்டும் சபதம் போட்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் தொடங்கி விட்டார்களா?? சபதத்தை இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications