உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பாரதி..கண்ணம்மா கூறும் வார்த்தை..எதிர்பாராத சீரியல் கடைசிமுடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிடம் பாண்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி பாண்டியுடன் குஸ்தி சண்டை இடுகிறார்.
பாண்டி கடைசி நேரத்தில் குஸ்தியில் தோற்று கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.
பாரதியிடம் தோற்று விட்டதால் பாண்டி கடைசியில் பாரதியின் தலையில்
கம்பியால் அடித்து விடுகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் பாரதி மருத்துவமனையில் இருக்கிறார்.

குஸ்தி போட்டி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மாவிடம் பாண்டியை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று குஸ்தி போட்டு சண்டையிட்டு கொண்டிருக்கும்போது, பாண்டி அடித்ததால் தரையில் விழுந்து விடுகிறார். பின்பு பாண்டி அனைவரிடமும் உங்க டாக்டருடைய நிலைமையை பாருங்கள் என்று கூறிக் கொண்டிருக்கும்போது, பாரதி மீண்டும் எழுந்து பாண்டியுடன் சண்டையிட்டு பாண்டியை தோற்கடித்து விடுகிறார். இறுதியில் கண்ணமாவிடம் மன்னிப்பு கேளு என்று கூற ஊர்காரர்களும் அதையே கூறுகின்றனர். வேறு வழி இல்லாமல் பாண்டி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

சௌந்தர்யாவுக்கு தோன்றும் உணர்வு
பாண்டி கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டியின் நண்பர்கள் இரும்பு சுத்திகளை எடுத்து பாண்டியின் கையில் கொடுக்க பாண்டி அதை வைத்து பாரதியின் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார். பாரதி அந்த இடத்திலே மயக்கம் போட்டு விழுந்து விட அனைவரும் ஓடி வந்து தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே நேரத்தில் சௌந்தர்யாவிற்கு மனதிற்கு நெருடலாகவே இருக்கிறது. வீட்டில் கண்ணாடி உடைகிறது. மயக்கம் வருவது போன்று இருப்பதால் பாரதிக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க இருக்கிறது. நான் பாரதியை பார்த்தே ஆகவேண்டும் என்று சௌந்தர்யா அடம்பிடிக்கிறார்.

சௌந்தர்யாவுக்கு தெரியும் உண்மை
சௌந்தர்யாவிடம் அகிலன் அஞ்சலி என அனைவரும் ஆறுதல் கூறியையும் கேட்காததால் சௌந்தர்யா நான் தனியே அங்கே கிளம்புகிறேன் என்று கிளம்ப, பின்பு அனைவரும் நாங்களும் வருகிறோம் என்று காரில் பாரதி இருக்கும் ஊருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மருத்துவமனையில் பாரதியை சேர்த்து விட்டு டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை கூறிய கணபதி, பின்பு சௌந்தர்யாவுக்கு போன் செய்து இங்கே நடந்த விஷயங்களை கூறுகிறார். சௌந்தர்யா அதையும் கேட்டு அழுது கொண்டு நான் ஏதோ நடக்கப் போகிறது என்று சொன்னேன் ஆனால் நடந்து விட்டது உடனே ஹாஸ்பிடல் போக வேண்டும் என்று காரில் வருகின்றனர்.

கண்ணம்மாவின் திட்டல்கள்
அதே நேரத்தில் வீட்டில் கண்ணம்மா அப்பா மற்றும் தாமரையிடம் கோபமாக கத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக இவர் வந்து இங்கே பிரச்சனை பண்ண வேண்டும். நான் எனக்கும் பாண்டிக்கும் இருக்கும் பிரச்சனையில் இவர் எதுக்கு தலையிட வேண்டும். நான் பாண்டி என்னைப்பற்றி தப்பாக பேசுவதற்கு அவனுக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டேன். இதில் இவர் எதுக்கு பிரச்சனை செய்து என்னை ஊரில் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்திருக்கிறார். இந்த டாக்டர் இவ்வளவு இறங்கி இவருக்காக உயிரைக் கொடுத்து விளையாடுகிறார் ஆனால் இந்த கண்ணம்மா திமிர் பிடித்தவள் என்று ஊர்காரர்கள் சொல்ல வேண்டும் என டாக்டர் எப்படி செய்து கொண்டிருக்கிறார் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆபத்தான நிலையில் பாரதி
டாக்டர், படித்தவர் தானே டாக்டர் அவருடைய வேலையை சென்னையில் பார்க்க வேண்டியது தானே, எதற்காக இந்த ஊரில் வந்து இப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருக்க வேண்டும். நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று இங்கே வந்தால் இங்கேயும் இருக்க விடாமல் இவர் தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று கண்ணம்மா கோபத்தில் திட்டிக் கொண்டிருக்க, அப்போது கண்ணம்மாவின் அப்பா பாரதிக்காக பரிந்து பேச, கண்ணம்மா மீண்டும் கோபப்படுகிறார். அப்போது ஒரு நபர் வந்து பாரதி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார். இன்று இரவு தாண்டினால் தான் எதுவும் சொல்ல முடியும் என்று கூறி விட்டார்கள் என்று சொல்ல கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications