பாரதிகண்ணம்மா சீரியலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு.. வீடியோவை வெளியிட்டு பகீர் கிளப்பிய ரோஹித்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முதல் பாகம் முடிவடைய இருக்கின்றது.

முதல் பாகத்தில் யாரும் எதிர்பார்க்காத மாதிரி வெண்பா மற்றும் பாரதியின் வீடியோ ஒன்றை ரோஹித் வெளியிட்டுள்ளார்.

வெண்பாவை கழட்டி விட்ட பாரதி

வெண்பாவை கழட்டி விட்ட பாரதி

இன்றைய எபிசோட்டில் பாரதி வெண்பாவை வேண்டாம் என்று விட்டுவிட்டு சென்ற பிறகு அவரை ரோஹித் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும் போது வெண்பா திருமணத்தை தடுத்து நிறுத்த சொல்லி இருந்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்த நேரத்தில் தற்போது ரோஹித் வெளியிட்ட வீடியோ பலருக்கும் வியப்பையம் அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறது.

முடிவை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

முடிவை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றது. முதல் பாகம் முடிவடைய இருக்கும் நேரத்தில் இந்த சீரியல் எப்படி? முடியப்போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் பலரும் பலவிதமாக தங்களுடைய எதிர்பார்ப்புகளை கூறி வருகின்றனர். ஆனால் ரோஹித் பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் ரிசப்ஷன் நடப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

ரோஹித்தின் பெரிய மனசு

ரோஹித்தின் பெரிய மனசு

திருமண மண்டபத்தில் இருந்து ஓடி வந்த வெண்பாவிற்க்கு பாரதி கோயிலில் தாலி கட்டலாம் என்று இருக்கும் போது கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் வந்து திருமணத்தை நிறுத்தி விட்டனர். அது மட்டும் இல்லாமல் வெண்பாவை பற்றிய மொத்த உண்மையையும் பாரதிக்கு தெரிந்து விட்டது. பாரதி வெண்பாவை கன்னத்தில் அறைந்து விட்டு இனி என் முகத்தில் முழிக்காதே என்று கிளம்பிவிட்டார். இந்த வேலையில் கர்ப்பமாக இருக்கும் வெண்பாவை தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரோஹித் கூறி இருக்கிறார். தற்போது அவருக்கு தாலி கட்டலாம் என்று இருக்கும் போது வெண்பா ஸ்டாப்பிட் ரோஹித் என்று திருமணத்தை நிறுத்துகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

எதிர்பார்க்காத முடிவு தான்

எதிர்பார்க்காத முடிவு தான்

இனி வெண்பா என்ன புது பிளான் செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கும்போது ரோஹித் வெளியிட்ட வீடியோ குழப்பத்தை ஏற்படுத்துகிறது. டிஎன்ஏ டெஸ்ட் பாசிடிவியாக வந்தால் பாரதி, கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் இந்த நேரத்தில் வெண்பாவோடு இவருக்கு இங்கே ரிஷப்ஷன் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி இருப்பதால், இந்த வீடியோவால் முதல் பாகத்தில் முடிவை யோசிக்க முடியாமல் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். வெண்பாவின் மீது உயிரையே வைத்திருக்கும் ரோஹித் இந்த மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, இதெல்லாம் என்ன வெண்பா என்று கேப்ஷன் கொடுத்து கதறிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+