பரிதாப நிலையில் வனிதா... கன்சஷன் ரூமில் பிக் பாஸ் கொடுத்த அட்வைஸ்.. இப்படி ஆகிவிட்டாரே
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர்.
இதுவரைக்கும் நன்றாகத்தானே இருந்தார் என்ன திடீரென இப்படி நிலைமை ஆகிவிட்டது என்று பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

நான்காவது நாள் ஆட்டம்
ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருந்தாலும் இதில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் உள்ளே நடக்கும் சண்டை சச்சரவுகளும் தெளிவாக ரசிகர்களால் பார்த்துக்கொள்ள முடிகிறது மற்றும் அதற்கான காரணங்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்று ஒரு சிலர் கூறி வந்தாலும் இதில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் பார்ப்பதற்கு நேரம் கிடைக்காது. அதனால்
பல முக்கியமான நிகழ்வுகள் கூட பார்க்க முடியாமல் தான் இருந்து வருகிறது என்று கூறி வருகின்றனர்.

வனிதாவின் வேண்டுகோள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் இதில் சண்டைக் காட்சிகள்தான் ப்ரோமோவாக வெளியிட்டு வருகின்றனர். அந்த மாதிரிதான் அடிக்கடி ப்ரோமோகளில் போட்டியாளர்கள் சண்டை போடும் காட்சிகள் மட்டுமே இடம்பெற்று வருகிறது. ஆனால் உள்ளே நடக்கும் பல முக்கியமான நிகழ்வுகளை பார்க்கும் போது தான் தெரிகிறது அங்கே என்ன நடக்கிறது என்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த மாதிரி தான் சண்டை போட்டுக் கொண்டிருந்த வனிதா பிக்பாஸ் கன்சஷன் ரூமில் கதறி அழுது கொண்டிருக்கிறார். இவர் காலையிலிருந்தே பிக் பாஸ் தன்னை அழைத்து பேசும்படி கூறியிருந்தார். அதனால் பிக்பாஸ் இவரை கன்சஷன் ரூமிற்கு அழைத்து இருந்தது.

பிக்பாஸ் கூறிய அட்வைஸ்
உள்ளே சென்றதும் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் எங்கிரேஜ் எதுவும் இல்லாததால் உடல் அளவிலும், மன அளவிலும் நான் அதிகமாக சோர்ந்துள்ளேன். குழப்பமான நிலையில் இருந்து வருகிறேன் என்ன செய்கிறேன் என்று கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்று வனிதா தன் நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு பிக் பாஸ் நீங்கள் ஏற்கனவே இந்த வீட்டில் இருந்தவர் தானே?? உங்களுக்கு தெரியும்தானே.. இங்கே எதுவெல்லாம் கிடைக்கும், எது எல்லாம் கிடைக்காது என்பது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆமாம் என்று வனிதா கூறியிருக்கிறார். அப்போது சில பொருள்களை இங்கேடாஸ்க் விளையாடி லட்சரி பட்ஜெட் மூலமாகத்தான் பெற முடியும் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Recommended Video

பிக்பாஸ் அனுப்பிய கடிதம்
பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு வனிதா ஆமாம் என்று கூறியிருந்தாலும் எனக்கு அடிப்படை பொருட்கள் தேவை நான் காபி தூள், தயிர், நெய் இல்லாமல் இருந்துகிட மாட்டேன் அதனால் எனக்கு அதனை அனுப்பி தரும்படி கேட்டிருக்கிறார். உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மாத்திரைகள் மற்றும் அடிப்படை பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பிக்பாஸ் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று காலையில் வனிதா கேட்ட அடிப்படை பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று பிக்பாஸ் கடிதம் அனுப்பி இருந்ததால் சக போட்டியாளர்கள் காண்டாகி இருக்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பது பொறுத்து இருந்து பார்த்தால் தெரியும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். வனிதாவின் பரிதாப நிலையைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் அனுப்பி வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications