ஆரிக்காக விஜய் டிவியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... செலிபிரிட்டிகளிடம் பெருகும் ஆதரவு..!!??
சென்னை: பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கிராண்ட் பினாலேவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஆரியின் வருகையை பற்றி மனம் திறந்துள்ளார்.
ஆரியின் கருத்தை கேட்ட ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதிக ஆதரவு அதிகரித்து வருகிறது.

நான்காவது சீசனின் டைட்டில் வின்னர்
என்னதான்.. ஆச்சு...விஜய் டிவிக்கு...!!?? தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் ரியாலிட்டி ஷோவில், மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை விஜய் டிவி எடுத்து ஒளிபரப்பி வருகிறது. பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வெற்றிகரமாக ஐந்தாவது சீசன் வரை வந்துவிட்டது. இதுவரை நடந்து முடிந்திருந்த நான்கு சீசன் களிலும் வெவ்வேறு போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றதை தங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றதைப் போல் உணர்வு பூர்வமாக தமிழ் மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.

மக்களின் மனதைக் கவர்ந்தவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி,ஒரு சிறந்த சமூக சேவகர் ஆகவும், தமிழ் கலாச்சார ஆர்வலராகவும் பிரபலமாக இருந்தவர் ஆரி. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே இவர்தான் வெற்றியாளர் என்று துல்லியமாக அனைவராலும் கணிக்கப்பட்டு வந்தவர். அதேபோல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் பொருட்டு டைட்டிலையும் வின் பண்ணி அசத்தினார். அந்த சீசனில் மட்டுமல்ல எல்லா சீசனிலும் ஆரி போல் ஒரு போட்டியாளர் இருக்கவேண்டும் என்று அனைவரும் என்னும் அளவிற்கு, தன் நடவடிக்கைகள் மற்றும் குணங்கள் மூலம பார்வையாளர்களை தன்வசப்படுத்தி இருந்தார்.

ஆரியின் விளக்கம்
தற்பொழுது பிக் பாஸ் சீசன் 5 யில் சுவாரஸ்யமான போட்டியாளர் இல்லாவிட்டாலும், ஏதோ ஓரளவிற்கு தாக்குப்பிடித்து இறுதிவரை வந்து விட்ட நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.அதில் சிறப்பு விருந்தினராக முந்தைய சீசனின் வெற்றியாளர் ஆரி கலந்து கொள்வார், என்று பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான பார்வையாளர்களும் எதிர்பார்க்கப்பட்டது. அவரை எதிர்பார்த்து தாங்கள் காத்திருப்பதை சமூக வலைதளங்களில் பலர் கருத்தாக பதிவிட்டு வந்தனர். இந்த கமெண்டுகளையும், அழைப்பையும் பார்த்த ஆரி," நீங்கள் அனைவரும் பிக் பாஸ் 5 இறுதிப்போட்டியி நிகழ்ச்சியில் என்னை காண ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்பதை அறிவேன், நானும் உங்களையும் கமல் சாரையும் திரும்பவும் சந்திப்பதில் ஆர்வமாக தான் இருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நிகழ்ச்சிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை" என்று டுவிட் செய்துள்ளார்.

பிரபலங்களின் ஆதரவு
ஆரி யின் இந்த ட்விட்டை பார்த்து அதிர்ச்சியான ஆரி மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள், விஜய்டிவி நிறுவனத்தை கமெண்டுகளால் கழுவி ஊற்றி வருகின்றனர். இதை பார்த்த கடந்த சீசன் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தி "நீ ..கலந்து கொள்ளாதது நிகழ்ச்சிக்கு தான் நஷ்டமே தவிர.. உனக்கு அல்ல தம்பி." என்று ஆறுதல் கூறியுள்ளார். இதுவரை வந்த சீசனில் இந்த சீசன் தான் மிகவும் மோசமான சீசன் எனவும், இதில் தாங்கள் கலந்து கொள்ளாதது ரொம்பவே நல்லது. என்றும் ஆரி க்கு ஆதரவாக பல கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் பதிவாகி வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications