வளர்த்து விட்டவர்களால் அமுதவாணனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. மன அழுத்த பாதிப்பு.. இடைவெளிக்கு காரணம்!?
சென்னை: காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்த அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில காலங்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை பற்றி அவர் இப்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அனைவரையும் சிரிக்க வைத்த அமுதவாணன் மன அழுத்தத்தால் மருத்துவரை பார்க்கும் அளவிற்கு அமுதவாணனுக்கு பல ஏமாற்றங்கள் கிடைத்து இருந்ததாம். இப்போதுதான் வாழ்க்கையை நன்றாக புரிந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

திறமைக்கு வாய்ப்பு இல்லை
பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அமுதவாணன் ஒரு சில வருடங்களாகவே எந்த சின்னத்திரை பங்க்ஷன் களிலும், திறப்பிட விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை. தாரை தப்பட்டை எனும் திரைப்படத்தின் பிறகு இவருடைய திறமைக்கு எந்த திரைப்பட வாய்ப்பும் கிடைக்காமல் தான் இருந்து வந்துள்ளது. காமெடி நிகழ்ச்சியில் விஜய் டிவியில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் பலரையும் சிரிக்க வைத்து அமுதவாணனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து அவர் பேசியதை கேட்டு பலரும் பீல் பண்ணி வருகிறார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட ஏழ்மை
பொதுவாக அனைவரையும் சிரிக்க வைப்பவர்கள் தான் மனதிற்குள் ஆயிரம் கவலைகளை அழுத்தி வைத்திருப்பார்கள் என்பது பலருக்கும் சொல்வார்கள். அதுபோலத்தான் அமுதவாணனின் நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறதாம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய மிமிக்கிரி மற்றும் காமெடி திறமையால் டைட்டில் ஜெயித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பல கஷ்டங்களை இவர் அனுபவித்திருக்கிறார். குடும்பத்தில் இவர் ஆறாவது குழந்தையாக இருப்பதால் இவர் சிறு வயதிலேயே படிப்பை விட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். இவருடைய சின்ன சம்பளமும் இவருடைய வீட்டிற்கு பெரியதாக உதவி செய்து இருக்கிறது.

முதல் திரைப்படம்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது அமுதவாணனுக்கு 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தார்களாம். அதற்குப் பிறகு அவர் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் ஜெயித்த பிறகு இவருக்கு 2500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்களாம். அதற்குப் பிறகு இவருக்கு தாரை தப்பட்டை என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஒரு திரைப்படம் தான் இவருக்கு முதலும் கடைசியுமாக அமைந்ததாக கூறியிருக்கிறார் .அதற்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்ததாம்.

மறுக்கப்பட்ட வாய்ப்புகள்
இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும் போது பலரை அறிமுகப்படுத்திய இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பலரிடம் பேசி இருக்கிறாராம். ஆனால் அவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வந்த பிறகு கூட அமுதவாணனுக்கு வாய்ப்பு இல்லாமல் ஒரு சில வருடங்கள் வீட்டில் இருக்கும்போது யாருமே கண்டு கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார் .அதுபோல இவர் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை நீங்கள் கூட்டிக்கொண்டு வந்தீர்களே அவர் வந்தால் நன்றாக இருக்கும், உங்களுக்கு அடுத்த முறை பார்ப்போம் என்று இவரிடமே இவரை மறுத்திருக்கிறார்களாம் .

வெளியே தான் மகிழ்ச்சி போல
தொடர்ந்து வெளியே செல்லும்போது எல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று பலரும் கேட்கும்போது இவருக்கு வருத்தமாக மனதிற்குள் இருந்தாலும், அதை வெளியே கட்டிக் கொள்ளாமல் அடுத்த வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசி வருவாராம். அப்படியே நாட்கள் செல்ல செல்ல இவருக்கு மன அழுத்தம் அதிகமாகி இருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பிறகு தான் அமுதவாணன் சகஜமான நிலைக்கு திரும்பி இருந்தாராம். இனி தன்னுடைய வாழ்க்கையில் சரியான முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு சில மாதங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி கிடைத்ததாகவும், அதில் கலந்து கொண்டிருப்பதாகவும் அமுதவாணன் கூறியிருக்கிறார். பலரையும் சிரிக்க வைத்து மன அழுத்தத்தை போக்கும் ஒரு கலைஞரின் வாழ்க்கையில் அவருக்கே மன அழுத்தம் ஏற்பட்டு வேதனை அடைந்ததற்கு காரணமாக அவர் வளர்த்து விட்டவர்களும் இருந்துள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications