ஒற்றைக்காலில், கொட்டும் மழையில் கெத்து காட்டிய போட்டியாளர்... இதுதான் மாஸ் டாஸ்க்
சென்னை: டிக்கெட்டை வெல்வதற்கான கடைசி டாஸ்க்கில் கொட்டும் மழையில் போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.
அமீர் மற்றும் சிபியின் கடைசி விளையாட்டு வேற லெவல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதுவரைக்கும் வாயாலேயே வடை சுட்டு கொண்டிருந்தவர்கள் ஒருவழியாக விளையாட்டை தொடங்கி விட்டார்கள் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

கடைசி டாஸ்க்கில் கலக்கல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் ஜெயிப்பதற்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் இருந்த டாஸ்க்குகள் அனைத்துமே வாயால் வடை சுடுவது போன்று இருந்தது. பிசிகல் டாஸ்க் எதுவுமே இல்லை என்று ரசிகர்கள் அதிகமாக கமெண்ட் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடைசியில் வெறித்தனமான டாஸ்க் இருக்கிறது என்று கூறி வருகிறது. இவர்களுக்காகவே அந்த வருண பகவானும் மழையை பொழிந்து விளையாட்டுக்கு சுவாரசியத்தை கூட்டி இருக்கிறாரா??என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.

வெளியேறிய போட்டியாளர்கள்
இந்த ஐந்தாவது சீசனில் பைனலுக்கு நேரடியாக சொல்லும் ஒரு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் இந்த வாரம் முழுக்க நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் யார் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் வைத்து இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது. முதல்நாள் போட்டியில் நிரூப் விளையாட்டு நன்றாக இருப்பதால் எங்களால் விளையாட முடியாது என்று போட்டியாளர்கள் அனைவரும் அவரை கட்டம் கட்டி வெளியே அனுப்பி விட்டனர். அடுத்த நாட்களில் தாமரை மற்றும் பாவனி வெளியேற்றப்பட்டார்கள். அதற்கடுத்த பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டார்கள். நேற்றைய போட்டியில் சஞ்சீவ் அனுப்பப்பட்டார். கடைசியாக சிபி மற்றும் அமீர் அதில் கலந்து கொண்டு வருகின்றனர்.

கயிற்றில் மணல் மூட்டை
இதுவரைக்கும் நடைபெற்ற போட்டிகள் கருத்து கணிப்புப்படி நடைபெற்றதாக இருந்து வந்ததால் ரசிகர்களுக்கு சுவாரசியம் இல்லை என்று பலர் கூறிவந்தனர். நேரடியாக பைனல் நிகழ்ச்சிக்கு செல்லும் போட்டியாளருக்கு பிஸிக்கல் டாஸ்க் வைத்து அதில் வெற்றி பெறுபவர்களை மட்டும் தான் அனுப்ப வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்ததால் என்னவோ பிக் பாஸ் நேற்று டாஸ்க்கை மாற்றி இருந்தது. அதுவும் ஏற்கனவே கடந்த சீசனில் நடந்தது போன்று கயிற்றில் மணல் மூட்டைகளை கட்டி தொங்க விட்டபடி அந்த கயிற்றை தன் கையால் பிடித்து வைத்துக்கொண்டு மணல் மூடைகள் கீழே இறங்காத படி அதிக நேரம் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

வெற்றி பெறுபவர் யார்?
கடந்த சீசனில் ஏற்கனவே இந்த டாஸ்க் வைத்து விட்டாலும் இந்த சீசனில் இதில் வித்தியாசமாக செய்திருக்கின்றனர். கயிற்றை கையில் இழுத்து பிடித்தபடி தரையில் நிற்க கூடாது. அவர்கள் ஒரு ஸ்டூலில் நிற்க வேண்டும். அதுவும் ஒற்றை காலில் நிற்க வேண்டும். இதை பார்த்ததும் ரசிகர்கள் மிரண்டு போயிருக்கின்றனர். இதில் ஏற்கனவே காலில் அடிபட்டு இருக்கும் அமீர் கலந்து கொள்வதால், அவரை வெளியேற்றுவதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார்களா?? என்று பலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது இன்று விளையாட்டு வேற லெவல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications