உலகத்தின் பார்வையில் மறைத்த முகத்தை கண்டுபிடித்த போட்டியாளர்கள்...இன்று சம்பவம் இருக்கு
சென்னை: பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கும் இன்று பஞ்சாயத்து தொடங்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மீண்டும் வாயால் வடை சுடும் டாஸ்க்கா?? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் சீசன்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது வரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தனர். ஆனால் தற்போது போட்டியாளர்கள் 6 பேர் தான் இருக்கின்றனர். இவர்களில் யார் ஜெயிக்கிறார்கள் என்று ஆர்வம் அதிகமாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் ஜெயிப்பார் என்று ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்டு ஒரு போட்டியாளரை ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த சீசனில் அப்படி யாரையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை. ஒவ்வொருநாளும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசன் பல நேரங்களில் சுவாரஸ்யம் குறைவாகி விட்டது என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு காரணம் எந்த சீசனிலும் இல்லாத இந்த சீசனில் பல டாஸ்க்குகள் வாயால் வடை சுடுவதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். பிசிகல் டாஸ்க் இருந்தால்தான் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். எப்படியோ நிகழ்ச்சி முடிவடையும் கடைசி வாரத்தில் இருக்கும் நிலையில் தற்போது கூட பிக் பாஸ் அப்படித்தான் ஒரு டாஸ்க் வைத்துள்ளது.

ரசிகர்களின் கருத்து கணிப்பு
ஏற்கனவே அமீர் இந்த சீசனின் இறுதிப் போட்டிக்கு செல்லும் முதல் போட்டியாளராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது போட்டியாளர் யாரென்று தேர்ந்தெடுக்கும் பொறுப்பை போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ஒப்படைத்துள்ளது. இதைப்பார்த்து நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வருகின்றனர். சும்மாவே சிம்பத்தி காரணமாக ஒவ்வொரு டாஸ்க்கிலும் ஜெயித்து வரும் தாமரைச்செல்வி தான் இந்த டாஸ்க்கில் ஜெயிக்க போகிறார் என்று ஒரு சில ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். ஒரு சிலர் பலருக்கும் பிடித்து இருக்கும் ராஜு இதை தட்டி செல்ல வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர்.

கருத்து போட்டி போடும் ரசிகர்கள்
ஏற்கனவே ராஜுவை டைட்டில் ஜெயிக்க வைக்க ஒரு கூட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அது நடந்தால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் குறைந்துவிடும் என்று இன்னொரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பாவனி நேரடியாக இரண்டாவது இடத்திற்கு வந்தால் விளையாட்டுக்கு விறுவிறுப்பு ஏற்படும் என்று அவருடைய தீவிரமான விசிறிகள் கொளுத்திப் போட்டு வருகின்றனர். எப்போதுமே ஜாலியாக அனைவரை வைத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா மட்டும் சளைத்தவரல்ல, அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பிரியங்காவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை அலறவிட்டு வருகிறனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications