பிக் பாஸ் 6வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள்.. இனி கண்டெண்டுக்கு பஞ்சமே இருக்காதாம்..!!
சென்னை: பிக் பாஸ் சீசன்6 விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் போட்டியில் கலந்து கொள்ள கூடிய போட்டியாளர்களாக மூன்று செலிபிரிட்டிகளின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 6க்கான ப்ரோமோ வெளியாகி அதில் கமல் கொடுத்த பில்டப் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை கூட்டி உள்ள நிலையில் இந்த மூன்று செலிபிரிட்டிகள் போட்டியில் பங்கு வருவது ரசிகர்களை மேலும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த சுவாரஸ்யம்
பிக் பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஆறாவது சீசன் வரை வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் குறைவதாகவும், ஆரம்ப சீசன்களில் இருந்த விறுவிறுப்பு இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு காரணம் போட்டியாளர்கள் தான் என்றும் பலர் கூறினர். பிக் பாஸ் நிகழ்ச்சிகள் ஆரம்பித்த புதிதில் மக்களுக்கு ஓரளவு பிரபலமான முகங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய பிக் பாஸ் குழு, போகப் போக மக்களுக்கு அறிமுகமே இல்லாத, சரியாக தமிழ் பேசத் தெரியாதவர்களை போட்டியாளர்களாக களம் இறக்கியது நிகழ்ச்சியின் மைனஸ் ஆக பார்க்கப்பட்டது.

புது ஐடியாவில் பிக் பாஸ் குழு
பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆரம்பிக்க உள்ள ஆறாவது சீசனை சுவாரஸ்யமாகவும் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ள பிக் பாஸ் குழு போட்டியாளர் தேர்வு, பிக் பாஸ் செட் அமைப்பு, போன்ற எல்லாவற்றிலும் பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகி வந்ததால், இந்த முறை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது நிகழ்ச்சி குழு. இருந்தாலும் கிடைக்கிற கேப்புகளில் ஒரு சில விஷயங்கள் லீக் ஆகத்தான் செய்கின்றன. அப்படித்தான் தற்பொழுது உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் என்று மூன்று செலிபிரிட்டிகள் பெயர் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ராபர்ட்
ராபர்ட் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆவார். சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் சிறு வயதிலிருந்து சினிமா துறையில் இருக்கிறார். விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள ராபர்ட் அவர்களுடன் சேர்ந்து சில பாடல்களில் ஆடவும் செய்து இருக்கிறார். முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளர் வனிதாவின் நண்பராக இருந்தவர். இருவரும் இணைந்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தனர். வனிதாவும் ராபர்ட்டும் லிவிங் டுகெதரில் இருந்ததாகவும், வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தி இருந்ததாகவும் அந்த நேரத்தில் செய்திகள் பரவியது.ராபர்ட் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றால் பல வதந்திகளுக்கான விடைகளையும்,பல பரபரப்பான விஷயங்களையும் பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மீனாட்சி ரச்சிதா
சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி கேரக்டரில் நடித்து இன்றளவும் மீனாட்சி என்ற பெயரிலே தமிழக சின்னத்திரை ரசிகர்களில் நீங்காத இடம் பெற்று இருப்பவர் ரச்சிதா ஆவார். தன்னுடைய அழகான நடிப்பால் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் ரசிகர்களை வைத்திருப்பவர் ரச்சிதா. தான் அறிமுகமான சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா தற்பொழுது அவரை பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து வாங்கி விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் இவர் நடித்து வந்த சொல்ல மறந்த கதை சீரியல் திடீரென முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு ஓகே சொல்ல வைத்து விட்டதாக உறுதியான தகவல்கள் பரவி வருகிறது.

விசித்ரா
90களில் கவர்ச்சி நடிகையாகவும், பல படங்களில் வில்லி மற்றும் காமெடி கேரக்டரிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் விசித்ரா. தொழிலதிபரை திருமணம் முடித்து மைசூரில் செட்டில் ஆனவர் தற்பொழுது சில சீரியலில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு 90ஸ் கிட்ஸ் களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மூன்று செலிபிரிட்டிகளும் ஒவ்வொரு வகையில் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவும், பிடித்த நபர்களாகவும் இருப்பதால், இவர்கள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் டிஆர்பி லெவல் எகிறும் என்று எதிர்பார்க்கலாம்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications