பிக் பாஸை விட்டு சான்ட்ரா வந்த அடுத்த நொடி, கம்ருதீன் தெருவில் இறங்கி செய்த செயல்.. வீடியோ காலில் கானா வினோத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் சான்ட்ரா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய அதே நேரத்தில் அவரால் ரெட் கார்ட் வாங்கிய கம்ருதீன் தெருவில் வெடி வெடித்து குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய ரசிகர்களை சந்தித்த கம்ருதீன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத பல சம்பவங்கள் போன வாரத்தில் நடந்தது. அதாவது டாப் 5 போட்டியாளர்களில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்ருதீன் மற்றும் பார்வதிக்கு பிக் பாஸ் டீம் அதிரடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இந்த விஷயம் சோசியல் மீடியா முழுக்க பெரிதாக பேசப்பட்டது.

கார் டாஸ்க்கில் சான்ட்ராவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் வெளியே தள்ளியது, ஆபாசமாக பேசியது போன்ற செயலுக்காக அவர்களுக்கு ரெக்கார்ட் கொடுக்க வேண்டும் என்று சோசியல் மீடியா முழுக்க குரல் கொடுத்தனர். அதன் காரணமாக பிக் பாஸ் டீம் அதிரடியாக இந்த முடிவை எடுத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் வெளியே போன பிறகு அவர்களுக்கு அதிக ரசிகர்களின் ஆதரவு கிடைக்க தொடங்கி விட்டது.
இவர்கள் வெளியேறியதற்கு காரணமாக இருந்த சான்ட்ரா மீது ரசிகர்களுக்கு வெறுப்பு வர ஆரம்பித்தது. சான்ட்ரா இதுவரைக்கும் அவர் கூட இருந்த பலரை முதுகுக்கு பின்னாடி பேசியது, அவர்களை வெளியேற்ற துடித்தது, அவருக்கு உதவி செய்தவர்கள் மீதே அபாண்டமாக பழி சொன்னது போன்ற செயல்கள்தான் அவருக்கு எதிராக திரும்பியது.
இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் நேற்று சான்ட்ரா வெளியேற்றப்பட்டார். அந்த நேரத்தில் கம்ருதீனுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் கம்ருதீன் ரோட்டில் இறங்கி வரும்போது, அவருக்கு மாலை அணிவித்து, செண்டா மேளம் முழக்கத்தோடு, வெடி வெடித்து வரவேற்பு செய்து இருக்கின்றனர்.
அப்போது கம்ருதீன் ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அவருடைய நண்பர்கள் பலரும் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சான்ட்ராவின் வெளியேற்றத்தை கம்ருதீன் வெடி வெடித்து கொண்டாடி இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் கம்ருதீனுக்கு அவருடைய பிக் பாஸ் நண்பரான கானா வினோத் வீடியோ காலில் பேசி இருக்கிறார். அந்த வீடியோக்களும் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கானா வினோத் பணப்பெட்டி டாஸ்க்கில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தார். அவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கடைசி நேரத்தில் பணப்பெட்டியை எடுத்தது கூட பெரிதாக பேசப்பட்டது.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் கம்ருதீனுக்கு பல இடங்களில் சப்போர்ட்டாகவும், ஒரு உண்மையான நண்பராகவும் இருந்தார். இப்போது வெளியே வந்த பிறகு கானா வினோத் கம்ரூதினுடைய கொண்டாட்டத்தில் வீடியோ காலில் பங்கு எடுத்திருக்கிறார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் இதுதான்டா உண்மையான நட்பு என்று பாராட்டி வருகின்றனர்.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications