
"அதற்கு தொடர்பு இருக்கு” என நினைக்கிறார்கள்.. போட்டியாளர்களின் குட்டை உடைத்த கமல்ஹாசன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டாஸ்க்களின் அடிப்படையில் பஞ்சாயத்து செய்வதற்காக கமல் இன்று காத்திருக்கிறார்.
கத்தி பேசினால் வெற்றி கிடைக்கும் என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாக கமல் இன்றைய ப்ரோமோவில் அனைவரையும் கதி கலங்க வைத்திருக்கிறார்.
லட்சுமியின் கேள்வியால் தவித்து போன குடும்பம்... வெண்பாவை கைது செய்த போலீஸ்.. பரபரப்பான இறுதி கட்டம்

கமல் கூறிய அறிவுரை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விளையாட்டை அனைவரும் விளையாட வேண்டும். இங்கே வந்தது விளையாடுவதற்கு தான் என்று புது மொழிகளை கூறி கமல் அனுப்பி வைத்ததன் விளைவாகவோ என்னவோ இந்த வாரம் ஆளாளுக்கு விளையாட்டை விளையாடுகிறோம் என்கிற பெயரில் கத்தி கூச்சலிட்டு வந்தனர் இந்த வாரம் நடைபெற்ற பழங்குடியினர் மற்றும் ஏலியன்ஸ் அணியினர் டாஸ்க் போட்டியாளர்களின் சண்டைகளும், சச்சரவுகளும் தான் அதிகமாக இருந்து வந்தது. இதில் எந்த சுவாரசியமும் இல்லையே என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இன்று கமல் பேசிய ப்ரோமோ பரபரப்பாக வைரலாகி வருகிறது.

நறுக்குன்னு நாலு வார்த்தை
நல்லா விளையாட ஆரம்பிச்சாங்கன்னா, சத்தமும் அதிகமாகுது. வெற்றிக்கும், சத்தத்துக்கும் தொடர்பு இருக்கு என்று உள்ளே இருக்கவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க. அது இல்லன்னு அவங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிலபேர் விழிப்புடன் இருக்காங்க, சிலர் முழிச்சுகிட்டு இருக்காங்க என்ன நடக்கிறதோ என்று அதையும் அவர்கள் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று இந்த வாரத்தின் தன்னுடைய பஞ்சாயத்தை சுருக்கமாக கமல் பேசி முடித்திருக்கிறார்.

குறும்படம் இருக்குமா
ஏற்கனவே இந்த வாரம் யாருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேள்வி எழுப்பி வரும் நிலையில், அசீம் மொத்த டாஸ்கையும் சண்டையிட்டு சொதப்பிவிட்டதை குறித்து பேச போகிறாரா? அல்லது இந்த டாஸ்கிலும் ஒரு சிலர் எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்ததை குறித்து பேச போகிறாரா? என்று பலர் எதிர்பார்ப்போடு அசீம் மற்றும் அமுதவாணன் சண்டை குறும்படத்திற்காக ஒரு சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சிலர் தனலட்சுமி மற்றும் ஷிவின் அடிச்சி புடிச்சி தள்ளி விளையாடிய போது விக்ரமன் எதுவும் சொல்லவில்லையே என்று அதைக் குறித்து கமல் பேசினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடக்கப்போவது இதுதான்
ஆனால் இன்றைய ப்ரோமோவில் வெற்றிக்கும் சத்தத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்குன்னு சிலர் நினைக்கிறாங்க என கமல் சொல்லும் போது அங்கே தனலட்சுமி மற்றும் அசீம் இருவருடைய முகத்தை கிளோஸ் ஆப்பில் காட்டுகின்றனர். அதுபோல சில பேர் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லும் போது விக்ரமனின் முகம் க்ளோஸ் பண்ணி காட்டப்படுகிறது. இதனால் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான் விக்ரமனை வழக்கம் போல பாராட்ட போகிறார். அசீம் செய்தது தவறு என்று என்று டோஸ் கிடைக்கப் போகிறது என்று பலரும் பார்த்ததும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் போட்டியாளர்கள் அமைதியாக இருந்தவர்களை உசுப்பேத்தி விட்டது கமல் தானே. அதனால் விளையாட்டை வேறு விதமாக புரிந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று என்ன மாதிரி கருத்து சொல்லப் போகிறார் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.