முதல் முறையாக அசீம் செய்த செயலை பாராட்டும் ரசிகர்கள்.. உண்மையை சொன்னாலும் இப்படியா பண்ணுவாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் அசீம் முதல் முறையாக செய்த செயலுக்கு பாராட்டுக்கள் அதிகரித்து வருகிறது.

இன்றைய முதல் ப்ரோமோவில் மகேஸ்வரி மற்றும் அசீம் இருவரும் காரசாரமான விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் .அதில் அசீமின் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை குறித்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

வெளியே நல்லாவே கேட்டது

வெளியே நல்லாவே கேட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று 26வது நாள் தொடங்கி இருக்கின்றது. இதில் இன்றைய முதல் ப்ரோமோவில் அசீம் மற்றும் மகேஸ்வரி இருவரும் காரசாரமாக சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் நேற்றைய எபிசோடில் மகேஸ்வரி தவறான தீர்ப்பு வழங்கியதாக அசீம் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார். விக்ரமன் அணியினர் நேற்று ப்ரேக்கிங் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போது விக்ரமன் பேசியது அனைத்துமே ரசிகர்களுக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் உள்ளே இருக்கும் நடுவர்களான மகேஸ்வரி மற்றும் ADKக்கு அது கேட்கவில்லை என்று விக்ரமன் அணியிருக்கு மார்க் குறைவாக கொடுத்திருந்தனர்.

மகேஸ்வரி கேட்ட கேள்வி

மகேஸ்வரி கேட்ட கேள்வி

ஒருவர் கோவக்காரனாக இருந்தால் எப்போதும் கோபக்காரராக தான் இருப்பார்கள் என்று போட்டியாளர்கள் அசீம் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேற்றைய எபிசோடு மூலமாக பார்க்க முடிந்தது. கடந்த இரண்டு வாரங்களும் கமல் முன்னிலையில் அசீமுக்கு அட்வைஸ் கொடுத்ததை தொடர்ந்து அவர் பேசினாலே தவறாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவராக மகேஸ்வரி இருந்து வருகிறார். நேற்று விக்ரமன் பேசியது எங்களுக்கு சரியாக கேட்கவில்லை என்று மகேஸ்வரி பாய்ண்ட் குறைத்ததற்கு, இல்லை விக்ரமன் பேசியது எனக்கு நன்றாகவே கேட்டது என்று அசீம் கூறி இருந்தார் .ஆனால் அசீம் எல்லாம் யாரு? கருத்து செல்வதற்கு என்று மகேஸ்வரி கேள்வி கேட்டார்.

இந்த டீமே வேண்டாம்

இந்த டீமே வேண்டாம்

மகேஸ்வரியின் கேள்வியை கேட்டு அதிர்ச்சியான அசீம், நானும் உங்கள் அணியில் உள்ளவர் தான் அதனால் இப்படி பேசக்கூடாது என்று நேற்றே இவர்களுக்குள் பெரும் பிரச்சனை தொடங்கியிருந்தது. அதன் தொடக்கமாக இன்று முதல் ப்ரோமோவில் டைனிங்காலில் அமர்ந்தபடி அசீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் .அப்போது என்னை மதிக்காத டிமில் நான் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன? என்று அவர் கேள்வி கேட்கிறார் அதற்கு மகேஸ்வரி நீங்க ரொம்ப நல்லா பேசுகிற அசீம் என்று கூறுகிறார்.

வீம்புக்கு விவாதம்

வீம்புக்கு விவாதம்

அசீம், மகேஸ்வரி இடம் நீங்க ரொம்ப நல்லா பொய் பேசுறீங்க, இந்த மாதிரி எனக்கு பேச தெரியாது என்று சொல்கிறார். உங்களுக்கு நியூஸ் பத்தி ஒன்னும் தெரியாது என்று அசீம் மகேஸ்வரிடம் கூற ,ஆமாம் உங்களுக்கு ரொம்ப நியூஸ பத்தி தெரியும் இல்ல!? அப்போ எதுக்கு பிரேக்கிங் நியூஸ் கண்டண்டுல இப்படி சொதப்பீங்க என்று பேசுகிறார். அதற்கு அசீம் நீங்க ஒரு சைபர் ஜட்ச் நீங்க நடுவருக்கு தகுதி இல்லை என்று கூறுகிறார். இதனால் கடுப்பான மகேஸ்வரி அப்படியே முறைத்துக் கொண்டிருக்கிறார் .இதை பார்த்த ரசிகர்கள் பலர் முதல் முறையாக அசீம் இப்போதுதான் சரியாக வேலையை செய்து இருக்கிறார். அதற்கு இப்படி ஒரு சண்டை தேவையா? அசீம் சொல்வது எல்லாமே சரியாக இருக்காது என்று இந்த மகேஸ்வரி நினைத்துக் கொண்டு வீம்புக்கு விவாதம் செய்து கொண்டிருக்கிறார். என்று மகேஸ்வரியை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+