அவங்க சொல்லி தான் அனுப்புனாங்க.. விக்ரமனிடம் நடித்துக் கொண்டு இருந்ததை பற்றி உளறிய தனலட்சுமி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 101 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமனை பற்றி குறை பேசிய தனலட்சுமி முதல் முறையாக அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த பிறகு விக்கிரமனோடு தான் பேசுவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி தனலட்சுமி தெளிவுபடுத்தி இருக்கிறார்.

மாறிய கருத்துக்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு எவிட்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் கடைசி வாரத்தில் வந்திருக்கும் நிலையில் இதுவரைக்கும் தாங்கள் நினைத்திருந்த நிலைப்பாடு தற்போது மாறிவிட்டது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனலட்சுமியும் தான் விக்ரமன் பற்றி இதுவரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்று எனக்கு இப்போது தோன்றுகிறது என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.

ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஆரம்பத்தில் இருந்து தனலட்சுமிக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணி பலருடைய வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருந்த ஒரே நபர் விக்கிரமனாகத்தான் இருக்க முடியும். இவர் ஆரம்பத்தில தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையில் பிரச்சனை ஏற்படும் போதும், தனலட்சுமி மற்றும் அசல் கோளாறு இடையே பிரச்சனை நடைபெற போதும் கூட அதுமட்டுமில்லாமல் தனலட்சுமி மற்றும் அசீம் உடன் பிரச்சனை நடைபெறும் போது கூட அனைத்து இடங்களிலும் தனலட்சுமிக்கு ஆதரவாக தான் விக்ரமன் கேள்வி எழுப்பி குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தகுதி இல்லாத நபர் என்றால் அது விக்ரமன் தான் என்று கூறியிருந்தார்.

தனலட்சுமியின் கேள்வி
இந்த நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த தனலட்சுமி விக்ரமனிடம் நான் அடுத்தவர்களிடம் சண்டையிட்டால் நீ சரியாக செய்கிறார் உன்னுடைய கோபம் சரியானது என்று கூறிய நீங்கள் ஆனால் உங்களிடம் என்னுடைய கோபம் திரும்பும்போது மட்டும் அது தவறு என்று சொல்கிறீர்களே அது என்ன வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விக்ரமனும் எல்லோரிடமும் கோபப்படலாம் ஆனால் அது சரியான கோபமாக இருக்க வேண்டும். நான் உங்களுக்காக செய்யும் செயல்களையும் நான் புரிய வைக்கும் செயல்களையும் நீங்கள் புரிந்து கொள்ளாமல் பல நேரங்களில் அந்த கோபம் என் மீது திரும்புவது சரியானது அல்ல, கோபம் படலாம் ஆனால் சரியான கோபம் பட வேண்டும் என்று நான் உங்களுக்கு எதிராக கருத்து கூறினேன் என்று விக்ரமன் தெளிவுபடுத்தி இருந்தார்.

அவங்க சொல்லித்தான் செய்தாராம்
ஆனாலும் விக்ரமின் மீது தனக்கு இருக்கும் கோபத்தை குறைத்துக் கொள்ளாத தனலட்சுமி பல நேரங்களில் வெளியே காட்டக்கூடாது என்று இருந்தாலும், சில நேரங்களில் அவர் மீது இருக்கும் கோபம் அசீமுக்கு தன்னுடைய ஆதரவு என்கிற விஷயத்தில் எதிர்பாராமல் வெளியே தெரிந்து கொண்டுதான் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று தான் இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது பிக் பாஸ் கூறி அனுப்பியதால் தான் விக்ரமன் உடன் பழகினேன். ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் யாருடைய நட்பை தொடர வேண்டும் என்று நட்பு கயிறு கட்டும்போது விக்ரமன் என்னுடைய கையில் கயிறு கட்டினார். அதற்கு பிறகு தான் எனக்கு தோன்றியது எல்லாம் டாஸ்க்காக தானே அப்படி பண்ணி இருப்பாங்க நான் எதுக்கு இப்படி கோபப்பட்டேன் என்று புரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இதைக் குறித்து நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications