"கர்மா” திருப்பி தாக்கியதா? விக்ரமனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..அரசியல்வாதி என்பதை நிரூபிக்கிறாரா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் ஆரம்பத்திலிருந்து செய்து வந்த செயலுக்கு தற்போது அவருக்கு கர்மா திருப்பி தாக்கியுள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
கதை சொல்லும் டாஸ்க்கில் பிற போட்டியாளர்களின் கதைகளை நிராகரித்து ஓடி ஓடி பட்டனை அழுத்திய விக்ரமனின் கதையை ஆரம்பித்த உடனேயே போட்டியாளர்கள் முடித்து வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

புது டாஸ்க்
பிக் பாஸ் ஆறாவது சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் ஒளிபரப்பாகும் போது இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பலர் ரசிகர்களோடு அதிகமாக கனெக்ட் ஆகி விடுவார்கள். தங்களுடைய சொந்தக் கதைகளை சொல்லி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து விடுவார்கள். ஆனால் எந்த முறை பிக் பாஸ் இதில் பல மாற்றங்களை செய்து இருக்கிறது. சக போட்டியாளர்களின் கதையை போட்டியாளர்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து கதையை சொல்ல முடியும். அதுவும் 60 செகண்டுக்குள் மூணு ரெட் பட்டன்களை போட்டியாளர்கள் அழுத்திவிட்டால் கதைகளை நிறுத்திவிட்டு வெளியே வந்து விட வேண்டும் .முழுமையாக கதைகளை சொல்லும் போட்டியாளர் அடுத்த வார எலிமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றாவது நாளில் சரியான அடி
இந்த நிலையில் இரண்டு நாட்களாக கதை சொல்லும் டாஸ்க் நடந்து வருகிறது. இன்று ஆறு போட்டியாளர்கள் மட்டுமே கதை சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதில் ஒருவராக விக்ரமன் இருக்கிறார். விக்ரமனுக்கு 18-வது போட்டியாளராக கதை சொல்வதற்கு நம்பர் கிடைத்திருக்கிறது .அதனாலே ஆரம்பமான முதல் நாளிலிருந்து கதை சொல்லும் போட்டியாளர்களுக்கு ஓடி சென்று ரெட் பட்டனை அழுத்தி வெளியேற்றிக் கொண்டிருந்தார். இதனால் ஆரம்ப முதலே ரசிகர்கள் இவருடைய செய்கையை குறித்து கலாய்த்து வந்தனர்.

பல்ப் கொடுத்த மகேஸ்வரி
நேற்றைய எபிசோடு கூட விக்ரமன் இன்னும் இரண்டு போட்டியாளர்கள் தான் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட இருக்கிறார்கள். அதுவும் இவர்கள் ஆரம்பத்திலே தேர்ந்தெடுத்து விட்டால் கடைசி இருக்கும் நம்முடைய நிலைமை என்னாகும் என்று விஜே மகேஸ்வரிடம் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு விஜே மகேஸ்வரி நீங்கள் ஆரம்பத்தில் கதை சொன்னால் மட்டும் விட்டு விடுவோமா? அப்போதும் பட்டனை அழுத்தி வெளியேற்றி விடுவோம் என்று அவருக்கு பல்பு கொடுத்து இருந்தார்.

செய்த செயல் திரும்ப வந்தது
அதற்குப் பிறகும் விடாமுயற்சியோடு கதை சொல்லும் போட்டியாளர்களின் கதைகளை எல்லாம் விக்கிரமன் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இன்றைய எபிசோட்டில் அவருடைய கதை சொல்ல இருக்கிறது. அவர் நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது என்று கதையை தொடங்கும் போது மூன்று பட்டங்களும் அழுத்தப்பட்டு இவருடைய கதை முடிக்கப்பட்டு விடுகிறது. இதனை பார்த்தால் நெட்டிசன்கள் பங்கமாக விக்கிரமனை சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். கர்மா திரும்பவும் உங்களையே தாக்கி விட்டது. நீங்கள் செய்தது உங்களுக்கே கிடைத்துவிட்டது. என்றெல்லாம் இவரை குறித்து கருத்துக்கள் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications