"பாச தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி” ராபர்ட் மாஸ்டரை முகத்துக்கு நேராகவே வார்னிங் செய்த ரட்சிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் அத்துமீறி பழகி வருவதை புரிந்து கொண்ட ரட்சிதா தற்போது முதல் முறையாக அவருடைய முகத்துக்கு நேராக திட்டி இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து ரட்சிதா என்னுடைய கிரஷ் என்று கூறி அவரிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வந்த ராபர்ட் மாஸ்டரை குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துகள் பரவி வரும் நிலையில் இதை குறித்து ரட்சிதா எதுவும் பேசவில்லையே என்று ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது.

எதிர்பார்ப்புக்கு கிடைத்த வாய்ப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அறிமுகம் ஆகியிருக்கின்றனர். இதில் சின்னத்திரையின் மீனாட்சி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரட்சிதா மகாலட்சுமி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு சில வருடங்களாகவே முயற்சி செய்து இருந்த வருடம் தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு சீசனிலும் இவர் முழுமையாக பார்த்து வந்திருக்கிறார் .இந்த நிலையில் இவர் நடித்து வந்த சீரியல்கள் எல்லாம் திடீரென முடிக்கப்பட்டதும் ஃபீல் ஆகி இருந்த நிலையில் இவருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சி கிடைத்ததாக கூறியிருக்கிறார்.

மூக்குத்தி
சின்னத்திரை ரசிகர்கள் அதிகமாக ரட்சிதாவுக்கு சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நாட்களில் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் என்னுடைய கிரஷ் என்று கூறிக்கொண்டு நான் உனக்காகத்தான் சீரியல் பார்ப்பேன் அந்த அளவிற்கு உன்னை சீரியல் பார்க்கும்போதே பிடித்து விட்டது என்று முகத்துக்கு நேராகவே பேசி அதற்கு பிறகு அவரோடு அதிகமாக பழகி வருகிறார். ரட்சிதாவை மூக்குத்தி என்று செல்லமாக அழைத்தபடி ரட்சிதாவிடம் முத்தம் கேட்பது பிற போட்டியாளர்கள் ரட்சிதாவோடு பழகினால் அதற்கு முகத்தை மாற்றிக் கொள்வது, என்னிடம் ரகசியத்தை சொல்லாமல் மறைத்து விட்டாயே என்று உரிமையாக கோபப்படுவது போன்ற செயல்களை செய்து வருகிறார்.

நாமினேஷன் செய்த ரட்சிதா
ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வந்த ரசிகர்கள் பலர் ராபர்ட் மாஸ்டரை திட்டிக்கொண்டு இருப்பது போல, ரட்சிதாவையும் திட்ட தொடங்கி விட்டனர் காரணம். ராஜா ராணி டாஸ்கில் ரட்சிதா ராபர்ட் மாஸ்டர் பேசவில்லை என்று அழுததை வைத்து சிலர் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் என்று ஆனால் நேற்றைய எபிசோடில் ஓபன் நாமினேஷனில் ரட்சிதா, ராபர்ட் மாஸ்டருக்கு முகத்துக்கு நேராகவே ரட்சிதா அவரை நாமினேசன் செய்து விட்டார் .அதை பார்த்து ராபர்ட் மாஸ்டர் மட்டும் அல்லாமல் போட்டியாளர்களும் ரசிகர்களும் அதிகமாக அதிர்ச்சி தான் அடைந்து இருந்தனர். ரட்சிதாவின் கணவர் கூட இதை பாராட்டி இதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக வருகிறது என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ராபர்ட் மாஸ்டரின் கேள்வி
இந்த நிலையில் 24 மணி நேர எபிசோடில் ரட்சிதாவை தனியாக அழைத்து ராபர்ட் மாஸ்டர் பேச வேண்டும் எனக் கூற நீங்க ஓபன் நாமினேஷன் பற்றி பேச வேண்டும் என்று சொன்னால் நான் வரமாட்டேன் என ரட்சிதா சொல்ல அதுதான் உனக்கு தெரியுது இல்ல, நான் என்ன சொல்ல போகிறேன் என்று நமக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. எதற்காக அப்போ என்னை நாமினேஷன் செய்தா? நீ சொன்னதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க, நானும் ஷாக் ஆகிட்டேன். அதற்கு ரீசன் சொல்லு என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ரட்சிதாவின் தெளிவான விளக்கம்
அதற்கு ரட்சிதா ராபர்ட் மாஸ்டர் நீங்க ஆல்ரெடி கடை நிலைக்கு போயிட்டு ஒரு நல்ல ஆப்பர்சுனிடியாக தான் இங்கு வந்து இருக்கீங்க, அதனால இதை நீங்க வீணடிக்க கூடாதுன்னா உங்களோட கேமை நீங்க விளையாடி தான் ஆகணும். அது போல நானும் என்னுடைய கேமை விளையாடனும்னா கண்டிப்பா தனித்தனியாக தான் விளையாடனும். எனக்கு இதெல்லாம் செட்டே ஆகாது என தெளிவாக பேசுகிறார். ஆனால் ரட்சிதா பேசுவதை ஏற்றுக்கொள்ளாத ராபர்ட் மாஸ்டர் மேலும் மேலும் அது எப்படி நீ என்னை நாமினேஷன் செய்யலாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர் இதை பார்த்த பலர் ரட்சிதாவை பாராட்டி இதற்கு மேலுமா ராபர்ட் மாஸ்டருக்கு புரிய வைக்க வேண்டும் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications