பிக் பாஸ் தமிழ் 6: பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறுபவர் இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்.!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பண பெட்டி டாஸ்க் வழக்கமானது தான். தற்போது அதை எடுப்பதற்காக போட்டியாளர்களுக்குள் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் பலர் இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர்தான் என்று உறுதியாக கூறிவரும் நிலையில் அதே போட்டியாளரே இந்த முறை ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் பணப்பெட்டியை தூக்கி விடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து வரும் சம்பிரதாயம்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷயங்கள் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அதை குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் நன்றாக தெரிந்து கொண்டுதான் இந்த நிகழ்ச்சியில் விளையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 44 வது நாள் தொடங்கி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் பணப்பெட்டி டாஸ்க் வந்துவிடும் என்று போட்டியாளர்கள் இப்போது அதை குறித்து எதிர்பார்க்க தொடங்கி இருக்கின்றனர்.

தாமரை செல்வியின் பிடிவாதம்
இதற்கு முன்பு நான்காவது சீசனில் கேப்ரில்லா பணப்பெட்டியோடு வெளியேறினார். அதுபோல கடந்த ஐந்தாவது சீசனில் போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தாலும் யாருக்கும் பரீட்சையம் இல்லாத நபராக இருந்த தாமரை செல்வி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விட வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கருத்து கூறி வந்தனர். ஏழ்மையில் இருந்து வந்திருந்த தாமரை இந்த பணத்தை எடுத்தால் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அனைவரும் கருத்து கூறி வந்த நிலையில் எத்தனை லட்சமோ கோடி வந்தாலும் நான் எடுக்க மாட்டேன் என்று தாமரை செல்வி கூற சிபி எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

வின்னருக்கு மட்டும்தான் பரிசு
தாமரை செல்வி என்னதான் வைராக்கியமாக இருந்தாலும் கடைசி நேரத்திலும் கூட 15 லட்சம் வந்தவுடன் சிபி கேட்டுக்கொண்டுதான் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் வருபவர்களில், முதலிடத்தில் ஜெயிப்பவர்களுக்கு மட்டும் தான் 50 லட்சம் பரிசு தொகையை அடைய முடியும். இரண்டாவது மூன்றாவது இடத்தில் வருபவர்களுக்கு சம்பள பணம் மட்டும் தான் கிடைக்கும். கடந்த சீசனில் இரண்டாவது மூன்றாவது இடங்களில் வந்தவர்களுக்கு பரிசு கொடுக்கலாமே என சிலர் ஆதங்கப்பட்டனர். ஆனால் பிக் பாஸ் இதுவரைக்கும் செய்யவில்லை. ஒவ்வொரு சீசனிலும் பாதி நாட்களை கடந்த பிறகு சூட்கேசில் பணம் வைக்கப்படும் அதில் ஒரு லட்சத்தில் இருந்து தொகை கூடிக் கொண்டே போகும்.

அசீம் முடிவு
ஒரு சில நேரங்களில் வைக்கப்படும் பணத்தின் அளவு குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பணத்தைக் காட்டி போட்டியாளர்களுக்குள் மனதை மாற்றும் முயற்சியில் பிக் பாஸ் ஈடுபட்டு வரும். ஒரு சில போட்டியாளர்கள் தாங்கள் மனதில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் வந்தால் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது வேறு ஒரு போட்டியாளர் அதைவிட குறைவாக பணம் வந்த போதே அதை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவார். இதுதான் நான்காவது சீசனில் நடந்தது. எந்த நிலையில் இந்த பணப்பெட்டி விவாகரத்தை இன்று காலை டைனிங் ஹாலில் அசீம், மணிகண்டன், ஜனனி, ரட்சிதா உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசீம் பணப்பெட்டி பற்றி பேசினார். நான் எல்லாம் 20 லட்சம் ரூபாய் என்றால் எடுப்பேன் அதற்கு குறைவாக எல்லாம் எடுக்க மாட்டேன் என கூறினார். இந்த முறை டைட்டில் வின்னர் ஆக அசீமுக்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் போது இவர் 20 லட்சம் ரூபாய் கிடைத்தால் வெளியேறி விடுவேன் என்று கூறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications