இந்த முறை டைட்டில் வின்னர் இவர் தானா? அசீம் கொடுத்த கோர்டுவேர்ட்.. புரிஞ்சவங்க பிஸ்தா தான்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 92 வது நாள் ஆரம்பித்திருக்கிறது.
இதில் இந்த முறை டைட்டில் ஜெயிக்கப் போவது இவர்தான் என அசீமின் பெயரை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நேற்றைய எபிசோட்டில் நடந்த சில செயல் இதற்கு முன்பு சீசனில் நடந்தது போன்று இருக்கிறது என்று ரசிகர்கள் ஒப்பிட்டு கருத்து கூறி வருகின்றனர்.

கேரக்டர் மாறுவது இல்லை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருதே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் முக்கியமான ஒரு போட்டியாளராக அசீம் இருக்கிறார் என்று அசீமிற்கு அதிகமான ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருந்தாலும் இவரை குறித்த நெகட்டிவ் கருத்துக்களும் பல பரவிக் கொண்டுதான் இருக்கின்றது. காரணம் சக போட்டியாளர்களிடம் சண்டை என்று வந்துவிட்டால் மரியாதை குறைவாகவும், அதுவும் தரம்கெட்ட வார்த்தைகள் பேசி அவர்களை மட்டம் தட்டும் வகையில் பேசி விடுகிறார். இதை பற்றி ஒவ்வொரு வாரமும் கமல் அவரிடம் கூறிக்கொண்டு வந்தாலும் அசீம் அதை மாற்றிக் கொள்வதாக இல்லை என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

கருத்து மோதல்கள்
அசீமிற்கு எதிராக அவரோடு சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே கருத்து வெளியீட்டும் வீடியோ வெளியிட்டோம் வருகின்றனர். அது மேலும் அசீமிற்கு நெகட்டிவ் கருத்துக்களை உண்டாக்கும் என ஒரு சிலர் செய்து வந்தாலும் இதுதான் ஒருவருடைய உண்மையான கேரக்டர் அவர் நிஜமாகவே இருக்கிறார். யாரிடமும் நடிக்கவில்லை என்று கூறி அசீமுடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் அசீம் ரசிகர்கள் பெய்ட் பிரமோஷன் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் அசின் ரசிகர்கள் விக்ரமன் ரசிகர்களை குறை கூறி வருகின்றனர்.

ரொம்பவே ஃபீல் ஆகிவிட்டார்
அசிம் மற்றும் விக்ரமன் ரசிகர்கள் இரண்டு பக்கமும் மாறி மாறி குற்றம்சாட்டி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தாலும், நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் எட்டு போட்டியாளர்கள் இருந்த நிலையில் ரச்சிதா வெளியேறுவதற்கு முன்பு யார் இந்த சீசனில் டைட்டில் ஜெயிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்று கமல் கேட்ட கேள்விக்கு போட்டியாளர்கள் அதிகமானோர் அசீம் தான் என கூறியிருந்தனர். இது அசீம் உடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இது இந்த முறை மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் நடந்து வருவதாக இருந்தாலும் நேற்று இதைக் கேட்டு அசீப் ரொம்பவே ஃபீல் ஆகிவிட்டார்.

புரிஞ்சவங்க பிஸ்தா தான்
கமல் இடைவெளி விட்டு இருந்த நேரத்தில் உள்ளே எல்லோரும் ஏ டி கே சேவ் ஆகிவிட்டார் என பேசிக்கொண்டு இருக்கும்போது, அசீம் தனியாக வெளியே வந்து வானத்தைப் பார்த்து கை விரித்தபடியே நின்றிருந்தார். இது தான் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டாக வளம் வருகிறது. ஏற்கனவே நான்காவது சீசனில் சக போட்டியாளர்கள் அனைவரின் குற்றச்சாட்டுகளால் ஆரி இதே போல் தான் வானத்தை பார்த்தபடி தன்னுடைய கோபத்தை கத்தி காட்டி இருந்தார். அதே நிலையில் நின்ற அசீம் பார்த்து ஏடிகே தலைவர் போஸ் கொடுத்து கொண்டு இருக்கிறான், என்று கூறினார். அது போல இப்போதும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக கிண்டல் அடித்து வருகின்றனர். குறிப்பாக ஆரி 91 வது நாளில் இப்படி இதே போஸில் நின்றார். அதே நிலையில் இப்போது அசீம் நின்று கொண்டிருக்கிறார். அப்போ இந்த சீசன் டைட்டில் வின்னர் அசீம் தானா? என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது. இதை புரிந்தவர்கள் பிஸ்தா தான், இன்னும் இரண்டு வாரத்தில் ரிசல்ட் தெரியப் போகிறது என்று
அசீம் ரசிகர்கள் மீம்ஸ்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications