ராபர்ட் "சொல்வதெல்லாம் பொய்” "அந்த” வழக்கில் இருந்து வெளியே வந்தவர் தான்.. ரகசியங்களை கூறிய வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் ராபர்ட் மாஸ்டரின் செயல்களை பார்த்து காண்டான அவருடைய பழைய தோழியான வனிதா பரபரப்பான செய்திகளை கூறியிருக்கிறார்.

ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது வனிதா தான் என்ற உண்மையை ஏற்கனவே கூறி இருந்த நிலையில், தற்போது அவருடைய செயல்பாடுகளை பற்றி காண்டாகி இவர் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

சகப் போட்டியாளர்களின் கருத்து

சகப் போட்டியாளர்களின் கருத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக முதல்முறையாக டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டிருக்கிறார். இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலம் அடையாமல் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக நன்றாகவே பிரபலம் அடைந்து விட்டார். குறிப்பாக குழந்தைத்தனமாக இந்த நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு இருந்து வருவதாக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 அதை மறந்து விட்டாரோ

அதை மறந்து விட்டாரோ

பிக் பாஸ் வீட்டிற்குள்ளே முதல் டாஸ்க்கில் தன்னுடைய மகள் தன்னை யார் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தன்னை மாமா என்று அழைத்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் இறந்த பிறகாவது என்னை அப்பா என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகவும் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று கூறிய ராபர்ட் மாஸ்டர் அதற்குப் பிறகு அதை அப்படியே மறந்துவிட்டார் போல, அதனால் தான் ரட்சிதாவோடு நெருங்கி பழகி வருவதிலேயே தனது கவனத்தை செலுத்தி வருகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

நீதிபதியை தெரியாதாம்

நீதிபதியை தெரியாதாம்

ஆரம்பத்தில் என்னுடைய கிரஷ் என்று ரட்சிதாவை முகத்துக்கு நேராகவே புகழ்ந்து பேசிய ராபர்ட் மாஸ்டர் அதற்குப் பிறகு ரட்சிதாவிடம் அதிகமாக உரிமை எடுத்து பழகி வருகிறார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய மனம் கஷ்டப்பட்ட மாதிரி நடந்த செயல்களை வழக்காக தொடுத்து நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர். இதில் பலர் நீதிபதியாகவும் போட்டி போட்டு வரும் நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் கூறும் போது எனக்கு நீதிபதி எப்படி இருப்பார் என்று தெரியாது, என்னால் நீதிபதியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறினாராம் .அதை குறித்து தான் தற்போது வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

வெளிவந்த உண்மைகள்

வெளிவந்த உண்மைகள்

ராபட்க்கு ஏற்கனவே மூன்று திருமணம் டைவர்ஸ் நடந்து இருக்கிறது. இப்போ ஒரு டைவர்ஸ் போய்கிட்டு இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் எப்படி நடக்கும் என்று தெரியாது என்று சொல்வது சுத்த அபாண்டமான பொய்யாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரின் மேலே ஒரு கொலை கேசு இருந்தது. அதற்கு ஜாமின் கூட என்னுடைய வக்கீல் தான் வாங்கி கொடுத்தார் .ஆனால் அந்த நேரத்தில் எனக்கும் அவருக்கும் பழக்கம் கிடையாது. அப்போதே என்னுடைய வக்கீல் உதவியால் தான் இவர் வெளியேவே வந்தார். ஆனால் இப்போது நீதிமன்றத்தை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. டாஸ்க்கில் இருந்து நழுவுவதற்காக பொய் சொல்கிறாரா? அல்லது தன்னை நல்லவன் என்று காட்டிக் கொள்வதற்காக ராபர்ட் இப்படி நடந்து கொள்கிறாரா? என தெரியலையே என வனிதா பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் .ஏற்கனவே இந்த வார ஓட்டுகளின் அடிப்படையில் ராபர்ட் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில் அவரைப் பற்றி பல நெகட்டிவ் கருத்துக்களும் சமூக வலைதளத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற அதிகமாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+