ஜெயித்தாலும் கண்டுகொள்ளப்படாத அசீம்.. தோற்றாலும் கொண்டாடப்படும் விக்ரமன்.. சீண்டும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் ஜெயித்த அசீம் எங்கே சென்றாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் விக்ரமன் புகைப்படத்தோடு ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவுக்கு பிறகும் விக்ரமன் மற்றும் அசீம் ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
டைட்டில் ஜெயித்த அசீம் வெளியிடங்களுக்கு சென்றால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் சில புகைப்படங்களை வெளியிட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
அதோடு தான் தோற்றாலும் வெளியே செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கொடுக்கும் ஆதரவு விக்ரமனுக்கு அதிகமாக இருக்கிறது என்பது போன்ற புகைப்படத்தையும் ரசிகர்கள் வெளியிட்டு அசீம் ரசிகர்களை கலாய்த்து வருகிறார்கள்.

முடிவடையாத பேச்சு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு மட்டும் இன்னும் சமூக வலைத்தளத்தில் ஓய்ந்த பாடு இல்லை. இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த ஆறாவது சீசனில் அதிகமான ரசிகர்கள் தொடர்ந்து கருத்து கூறிக்கொண்டே இருக்கின்றனர். அதில் அசீம் ஜெயித்தது பற்றி பலர் இது தவறான முன்னுதாரணம் என்று கூறிவரும் நிலையில், அசீமுடைய ரசிகர்கள் அவர் உண்மையாக இருக்கிறார் யாரைப் போன்று நடிக்கவில்லை என்று அதற்கு பதில் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் ஆதரவு
இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரன்னராக விக்ரமன், ரன்னர் அப் ஆக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரன்னரான விக்ரமன் தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வழக்கமான அரசியல் பணியையும் தொடங்கி விட்டார். தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளியே செல்லும் இடமெல்லாம் அவருக்கு அதிகமான மக்கள் ஆதரவு கொடுத்து அவரோடு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி நடந்ததில்லையே
இந்த நிலையில் அசீம் ஒரு வாரம் கழித்து தான் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். தற்போது அவரும் வெளியே வரத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படத்தை பார்ப்பதற்காக வெளியே சென்ற இடத்தில் அவரை அதிகமான ரசிகர்கள் யாரும் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுக்காமல் இருந்த நிலையையும், அவர் தனி ஆளாக நின்று கொண்டிருந்த புகைப்படங்களையும் நெட்டிசன்கள் பலர் வெளியிட்டு அசீமை கலாய்த்து வருகிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் டைட்டில் ஜெயித்த போட்டியாளர்கள் பலர் இப்போது வெளியே வந்தாலும் அவரை சுற்றி ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்து விடுகிறது. ஆனால் அசீமை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

நெட்டிசன்கள் வெளியிட்ட புகைப்படங்கள்
அசீம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது கூட அவருக்கு பெரிய அளவில் எந்த வரவேற்பும் செய்யப்படவில்லை. சக பிக் பாஸ் போட்டியாளர்கள் போன்று தான் இவரையும் ரசிகர்கள் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்றும் ஆனால் விக்ரமன் தோற்றாலும் அவர் எங்கே சென்றாலும் அவரோடு போட்டோ எடுத்துக் கொள்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ஆசைப்பட்டு அவரிடம் பேசிக் கொண்டும், செல்பி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்று இப்போது நெட்டிசன்கள் இருவருடைய புகைப்படங்களையும் ஒன்றாக சேர்த்து ஜெயித்தாலும் யாராலும் கண்டுகொள்ளப்படாத இவர் எங்கே? தோற்றாலும் அனைவராலும் கொண்டாடப்படும் அவர் எங்கே? என்று கேள்வி எழுப்பி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்களும் மீம்ஸ்களும் சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications