லாரி டிரைவர்களை தரக்குறைவாக பேசிய அசீம்... திட்டி தீர்க்கும் டிரைவர்கள்... இப்படி மாட்டிக்கிட்டாரே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் தங்களிடம் வேலை செய்யும் லாரி டிரைவர்களை தரகுறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அசீமுக்கு எதிராக டிரைவர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் டிரைவர்களை அசீம் குடும்பத்தினர் எந்த மாதிரி மோசமாக நடத்துகிறார்கள் என்பதை அசீமே அவருடைய வாயால் கூறி இருக்கிறார்.

டிரைவர்களின் வாழ்க்கை
டிரைவர் வாழ்க்கை என்பது சமுதாயத்தில் பலராலும் எளிதாகவும், குறைவாகவும் பார்க்கப்படும் வாழ்க்கையாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து பலர் இந்த வேலையை செய்து வருகின்றனர். படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் படித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் தங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக டிரைவராக வேலை செய்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண் அசைந்தாலும் உயிர் போய்விடும் என்று தெரிந்தாலுமே பலர் இதை விரும்பியும், வேறு வழியில்லாமலும் செய்து வருகின்றனர். டிரைவருடைய வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னை நம்பி தன்னோடு பயணிப்பவர்களை கரை சேர்க்க வேண்டும் பொறுப்போடு செயல்படுவதாலே பலர் பல்வேறு அவமானங்களையும் சந்தித்து வருகின்றனர்.

சர்ச்சையான பேச்சு
அந்த மாதிரி தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருக்கும் அசீம் பெருமையான பேச்சு என்று இழிவான செயலை செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள்ளே ஆறாவது சீசனில் போட்டியாளராக பங்கு எடுத்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை நடிகர் அசீம் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஆக்க வேண்டும் என்று போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கோபத்தில் சக போட்டியாளர்களை மட்டம் தட்டி பேசிக் கொண்டும் தரைக்குறைவாக பேசிக்கொண்டும் வார இறுதி நாட்களில் கமல் முன்னிலையில் கண்டிப்பு வாங்கிக் கொண்டிருந்தாலும் இவர் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்று சொல்லும் அளவில் தான் இருந்து வருகிறார். இவருக்கு அதிகமான ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் இருக்கின்றனர்.

டிரைவர்கள் குறித்த பேச்சு
என்னதான் ரசிகர்கள் இருந்தாலும் அவரை எதிர்ப்பவர்கள் இருக்க தானே செய்வார்கள். அந்த மாதிரி தான் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள்ளே அசீம் மற்றும் விக்ரமன் இடையே சில கருத்து வேறுபாடுகள் வருவதை பார்த்து இருவருடைய ரசிகர்களும் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் அசீம் காய்கறி கட் பண்ணி கொண்டிருக்கும் போது, எங்கள் லாரி டிரைவர்கள் சரக்கு எடுத்துக் கொண்டு செல்லும் போது லேட் ஆகிட்டாங்கன்னா அல்லது ப்ராப்பரான டைம்ல கம்பெனியில் சேர்க்க முடியாமல் லேட் ஆகிட்டுனா, செமையா திட்டு வாங்குவானுங்க, பயந்திட்டு சொல்லுவானுங்க, பாய் ஓனருக்கு பயந்து வண்டிய வேகமா ஓட்ட வேண்டியது இருக்குனு, தெரிச்சிடுவானுங்க" என பேசிக் கொண்டிருக்கும்போது ஏதோ வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார். அந்த வார்த்தையை பீப் சவுண்ட் போட்டு கட் செய்து விட்டார்கள். தற்போது இந்த வீடியோவை டிரைவர்கள் பலர் பகிர்ந்து அசீமுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

மரியாதை இல்லாத பேச்சு
இந்த நிலையில் இந்த வீடியோவில் அசீம் பேசி இருப்பது வேறு இடத்தில் ஓனர்கள் படுத்தும் பாடு பற்றி டிரைவர்கள் இவரிடம் சொன்னதை தான் அசீம் பேசிக் கொண்டிருந்தார். அசீம் அவருடைய லாரி டிரைவரை இப்படி செய்யவில்லை என்று அசீனுடைய ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, லாரி டிரைவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாக ஆகிவிட்டதா? அவன் இவன் என்று ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அசீம் பேசுவது சரியா? என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அசீமை மட்டும் யாரும் நீ நான் என்று சொல்லக்கூடாது, ஆனால் டிரைவர் வாழ்க்கை வாழ்வார்கள் என்பதால் அவர்களை அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசிக் கொண்டிருக்கிறார், அதையும் ஒரு சில போட்டியாளர்கள் கேட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சமுதாயத்தில் இப்படித்தான் பலர் இருக்கிறார்கள் என்று சிலர் நொந்தபடியே கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications