Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசீம் பற்றி அவருடைய அம்மா வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு... ஒரே வார்த்தையில் மொத்த பாசமும் தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அசீம் பற்றி அவருடைய அம்மா வெளியிட்ட பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த வாரம் அசீம் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரம் அவருக்கு அதிகமான ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரைப் பற்றி அவருடைய அம்மா வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் மேலும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஏமாற்றம்

ஆரம்பத்திலேயே ஏமாற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பருங்கள் என்பதுதான் தாரக மந்திரம். அந்த மாதிரி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் ஆன அசீம் கலந்து கொண்டது ரசிகர்களின் மத்தியில் அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம் இவர் ஏற்கனவே பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்வதாக இருந்தது. அந்த நிலையில் சில குடும்ப காரணங்களால் அந்த சீசனில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டார். பின்பு இந்த ஆறாவது சீசனில் கலைந்து கொண்டதும் இவரின் தீவிரமான சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானோர் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர் .ஆனால் முதல் வாரத்திலேயே இவருக்கும் ஆயிஷாவிற்கும் ஏற்பட்ட சண்டையில் வாடி போடி என பேசியது பலருடைய முகசூலிப்பை ஏற்படுத்தியது.

அதட்டலும் அழுகையும்

அதட்டலும் அழுகையும்

அதோடு நிற்காமல் கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் பலரோடு இவர் கருத்து மோதல்களில் ஈடுபட்டார். அதிலும் தனலட்சுமி மீது பொய்யான குற்றச்சாட்டு, ஷிவின் பார்த்து உருவ கேலி செய்தது என பல்வேறு குற்றங்கள் பெரியதாக இருந்தது. அதைக் குறித்து கமல் கண்டித்தும், அறிவுரை கொடுத்தும் இருந்தார் கமல் பேசியதை கேட்டு பாத்ரூம் கதவை மூடிக்கொண்டு அசீம் அழுதது பார்க்கும்போது பலருக்கும் பீல் செய்யும் வகையில் தான் இருந்ததாம். அது மட்டும் அல்லாமல் ஆயிஷாவை இவர் வாடி, போடி என்று பேசுவதை கமல் திட்டிய போது தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவை நினைத்து மன்னிப்பு கேட்டு கேமரா முன்பு அழுதிருந்தார். நீங்கள் வளர்த்த வளர்ப்பு தப்பாக போய்விட்டது, என்னை மன்னித்து விடுங்கள் என்று அப்போது கூறி இருந்தார்.

அம்மாவின் பாசமான வார்த்தை

அம்மாவின் பாசமான வார்த்தை

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமுக்கு அதிகமான ஆதரவு பெருகி இருக்கிறது. காரணம் இவர் யாரிடமும் எப்போதும் நடிக்கவில்லை, மனதில் தோன்றுவதை அப்படியே பேசிவிடுகிறார் .சரி தவறு என்று பார்த்து நடிக்காமல் இவர் கேரக்டர் இருக்கிறது என்று இவருக்கு அதிகமான ஓட்டு அளித்து தற்போதைய வாரத்தில் முதலிடத்தில் இவர்தான் இருந்து வருகிறார் .இந்த நிலையில் இவருடைய அம்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசீம், நீ தொலைவில் இருந்தாலும் மனதளவில் உன்னோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மகனே!! என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அசீம் எப்படியும் இந்த சீசனில் ஜெயிக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மாறிப்போன ரசிகர்களின் மன மாற்றம்

மாறிப்போன ரசிகர்களின் மன மாற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிவி சேனல் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அசீன் தன்னுடைய குடும்பம், காதல், மனைவி மற்றும் பிரிவை பற்றி கவிதைகளால் அங்கே வெளிப்படுத்தி இருந்தார். அதை பதிவிட்டு அசீம் அம்மா நெகிழ்ச்சியாக கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்போதும் முரடனாக இருக்கும் ஒருவர் எப்போதும் கெட்டவராக மட்டுமே இருக்க மாட்டார். அவருடைய கோபத்தை வெளியே காட்டிவிடுகிறார். அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த வாரம் அவர் புரிந்து இருக்கிறார் .அதனால் இனி இதே மாற்றம் தொடர்ந்தால் அசீமுக்கு வெற்றி தான் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+