பிக்பாஸ்க்காக இவ்வளவு பெரிய உண்மையை தனலட்சுமி மறைத்து இருக்கிறாரே..தன் வாயாலே உளறி மாட்டிக் கொண்டார்
சென்னை:தற்பொழுது ஒளிபரப்பாகியுள்ள வீடியோக்களில் உள்ள உரையாடல்களை பார்த்த பலர் பிக் பாஸ் குழுவினரிடம் உண்மையை மறைத்து பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று உள்ளாரா!? தனலட்சுமி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ஜிபி முத்து உடனான மோதலால் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் தன் பெயரை கொஞ்சம் டேமேஜ் செய்து கொண்ட தனலட்சுமிக்கு மேலும் இது ஒரு பின்னடைவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டியாளர்களில் புதுமை
பிக் பாஸ் சீசன் 6ல் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடமிருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதாக பிக் பாஸ் குழு அறிவித்திருந்தது. அதன்படி சில போட்டியாளர்களையும் களம் இறக்கி உள்ளது. அதில் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி ஒருவர் ஆவார்.பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக உள்ளே சென்ற ஒரே நாளில் ஜிபி முத்து உடனான காரசாரமான மோதலால் தனது பெயரை தானே டேமேஜ் செய்து கொண்டுள்ளார்.

அதிர்ச்சி அளித்த உரையாடல்
இந்த நிலையில் இன்று ஒளிபரப்பான வீடியோக்களில் தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக தான் செய்ததை பற்றி சக போட்டியாளரிடம் கூறியது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளதகாக கூறி வருகின்றனர்.கடந்த நான்கு ஐந்து வருடங்களாகவே தான் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளதாக கூறிய தனலட்சுமி அதற்கு அடுத்து கூறிய விஷயம் தான் அதிர்ச்சி ரகமே!!!

உண்மையை மறைத்தாரா
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவும், தன்னால் யாரையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்க்கை நடத்த முடியாது என்பதற்காகவும் ஒரு வருடத்திற்கு முன்பு கமிட்டான திருமண வாழ்க்கையை தவிர்த்து விட்டதாகவும், இதை குறித்து முன்பே கேட்ட பிக் பாஸ் குழுவினரிடம் தனக்கு பழைய காதல் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டதாகவும், தான் ஏன்? அதை அவர்களிடம் எல்லாம் கூற வேண்டும் என்றும் அதிகார தோரணையில் பேசியுள்ளது தனலட்சுமி மீதான மதிப்பை பார்வையாளர்களிடம் மேலும் குறைப்பதாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தன் வாயாலே கெடும் தனலட்சுமி
பிக் பாஸ் குழுவினரிடமே தன்னைப் பற்றிய உண்மைகளை மறைத்திருக்கும் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் இன்னும் என்ன என்ன சம்பவங்களை செய்யப் போகிறாரோ!? என்றும் முதல் எவிக்ஷனிலே இவரை வெளியேற்ற வேண்டும் என்று பலர் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனக்கு வயது இருக்கும் பொழுதே பிக் பாஸ் போட்டியில் சாதித்த விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததாகவும், அதனால்தான் திருமண வாழ்வை தவிர்த்து விட்டதாக தனலட்சுமி கூறிய கருத்தை ஏற்காத நெட்டிசன்கள் அவர் கருத்திற்கு எதிர் கருத்துகளையே பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications