கண்ணை கட்டி கதறவிட்ட பிக் பாஸ்...தலைவர் பதவிக்கு தொடங்கிய தில்லாலங்கடி வேலைகள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது இந்த வார தலைவர் பதவிக்கான போட்டிகள் தொடங்கி இருக்கிறது.
தலைவர் பதவிக்காக போட்டியாளர்களுக்கு கண்ணைக்கட்டி பஸ்ஸில்ஸ் அடுக்கும் டாஸ்க் தொடங்கியிருக்கிறது.

புது டாஸ்க்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பதினைந்தாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல தற்போதைய வாரத்தின் தலைவர் பதவிக்கு பிக்பாஸ் புது டாஸ்க் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த டாஸ்க்கில் சில குளறுபடிகள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அதையே மீண்டும் வைத்துள்ளதால்
இது தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கான சரியான வழிமுறை இல்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
ஏற்கனவே கடந்தவாரம் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டில் பாலா, தாமரை செல்வியை நேராக சென்று பிடிக்கும் போதே அதில் சரியாக கண் கட்டப்படவில்லை, நன்றாக தெரிந்தது என்று கூறி வந்தனர். இன்றும் அது போல தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறிவருகின்றனர். ரசிகர்கள் கூறிவருவது ஏற்கனவே போட்டியாளர்களுக்கு தெரிந்து விட்டது போல, அதனால்தான் போட்டியாளர்களும் அதே கருத்தை கூறி வருகின்றனர். இந்த வார தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட்டு வருகிறார்கள். அதில் வனிதாவும், சுருதியும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய பஞ்சாயத்து
தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் கண்ணை கட்டிக்கொண்டு கேப்டனிட்டி எனும் வார்த்தையை சரியாக கண்டுபிடித்து போர்டில் மாட்டவேண்டும் என்பதுதான் பிக்பாஸ் கூறிய விதி முறையாக இருந்தது.இதில் வனிதா மற்றும் சுருதி இருவரும் கலந்துகொண்டு தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வனிதா முதல் ஆளாக அனைத்து எழுத்துக்களையும் சரியாக பொருந்தி இருக்கிறார். இதை பார்த்ததும் சக போட்டியாளர்கள் பலர் உங்களுக்கு கண் நன்றாக தெரிந்தது அதனால்தன் உங்களால் பொருத்த முடிந்தது என்று பஞ்சாயத்தை தொடங்கியிருக்கின்றனர்.

வனிதாவின் திடீர் முடிவு
உங்களுக்கு கண் தெரிகிறதா என்று போட்டியாளர்கள் கேட்டதற்கு வனிதா என்ன விளையாடுறீங்களா என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சினேகன் நீங்க இங்கே இருந்து எடுக்கும் போது பார்த்து பார்த்து எடுத்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்று கூறி இருக்கிறார் அதனால் மீண்டும் இந்த விளையாட்டை இன்னுமொருமுறை விளையாடலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு நான் இனி இன்னொரு முறை விளையாட மாட்டேன். அது போல பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று அதிரடியாக கூறி இருக்கிறார். இந்த சண்டை சச்சரவுகளை பார்க்கும்போது இந்த வார தலைவர் பதவிக்கு இப்போது பிரச்சனை தொடங்கிடுச்சி என்று பலர் கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications