பிக்பாஸ் அல்டிமேட்: என் மூளைக்குள் நீங்க இருக்கீங்களா..அபிராமிக்கு நிரூப் கொடுத்த காரசாரமான பதில்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு மட்டுமல்லாமல் கலவரத்திற்கும் பஞ்சமில்லாமல் தான் இருந்து வருகிறது.
அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே நிரூப் மற்றும் அபிராமி இடையே இப்படி ஒரு வாக்குவாதங்கள் ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

உறுதியோட தான் வந்து இருக்காங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கவேண்டும் என்று டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதுவரைக்கும் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும், தன்னுடைய திறமையை ரசிகர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் பலரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் ஆசை இதுதானாம்
தங்களுக்கு மனம் கவர்ந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வந்தாலும், இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டி இருக்கிறது. ஆனால் இதை விஜய் டிவியில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் சிறப்பு காட்சிகள் மட்டும் விஜய் மியூசிக் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாள் அல்டிமேட் நிகழ்ச்சி காலடி எடுத்து வைத்திருக்கிறது.

மீண்டும் சந்தித்த பிரபலங்கள்
ஒவ்வொரு சீசனிலும் இருந்தும் இந்த அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ஐந்தாவது சீசனில் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து ஐந்தாவது இடத்தில் வெற்றி நிரூப் மற்றும் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட அபிராமி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நிரூப் மற்றும் அபிராமி இருவரும் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு பரிச்சயமானவர்கள் தான். இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்தவர்கள் என்ற செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், தற்போது மீண்டும் இவர்கள் ஒரே வீட்டில் சந்தித்துக் கொண்டது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.

இரண்டு அணியாக பிரிந்த போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தற்போது இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது பலருடைய ஆவலான எதிர்பார்ப்பாக இருந்தது. இன்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே இவர்கள் இருவருக்குள்ளும் காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது நாளில் பிக்பாஸ் புதுவித டாஸ்க் கொடுத்துள்ளது. அதில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து செயல்பட வேண்டும் என்றும் அதில் ஒரு அணியினர் செய்தியாளர் களாகவும் மற்றொரு அணியினர் பிக் பாஸ் பிரபலங்களாக இருக்கின்றனர். பிக் பாஸ் பிரபலங்களை செய்தியாளர்கள் பேட்டி எடுக்கின்றனர்.

நிரூப் பேசிய அந்த வார்த்தை
இங்கு என்ன வேலை எனும் இந்த டாஸ்கில் தான் தற்போது அபிராமியின் கேள்விக்கு நிரூப் காரசாரமாக பதிலளித்து இருக்கிறார். அபிராமி செய்தியாளராக நிரூப்பிடம் போன வாட்டி பண்ண முடியாததை இப்ப வந்து பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்குப் என் மனசுல என்ன நெனச்சிருக்கேன் என்று உங்களுக்கு தெரியுமா?? என் மூளைக்குள் நீங்க இருக்கீங்களா?? இல்லல்லா..!! என்று கோபத்தோடு பதில் கூறியிருக்கிறார். இது அபிராமியின் மீது இருக்கும் வெறுப்பா?? அல்லது விளையாட்டில் இவருடைய பதில் இதுதானா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications