சர்ச்சை எல்லாம் சட்டை மாதிரி..நெகட்டிவை பாசிட்டிவாக எடுத்த போட்டியாளர்கள்...கடைசியில இப்படியா?
சென்னை: அல்டிமேட் நிகழ்ச்சியில் தங்களுக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை கூட பாசிட்டிவ்வாக போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும்போது நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
போட்டியாளர்கள் என்னதான் பார்த்து பார்த்து விளையாடி வந்தாலும் அவர்களுடைய உண்மையான கேரக்டர் பல நேரங்களில் வெளியாகிவிடுகிறது என்று ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ரீ என்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தற்போது நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறதே என்று ரசிகர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாம். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் 17 பேர் மீண்டும் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களைப் பற்றி ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் நிலையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் இவர்களுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்து வருகிறது என்பது பலருடைய குற்றச்சாட்டாகும். இருந்தாலும் ஒரு சிலர் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று ரசித்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் ப்ரோமோ
எப்போதும் ஒரு மனிதன் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்பதற்கு சான்றாக தான் தற்போது சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் இதுவரைக்கும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் தங்களுக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். வரைக்கும் வெளியான ப்ரோமோக்கள் எல்லாமே காரசாரமாக வாக்குவாதம் இருந்த நிலையில் இன்று கலகலப்பாக மாறி இருக்கிறது.

வனிதாவின் மகிழ்ச்சி
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் நீ யார் என்று எனக்கு தெரியும் எனும் டாஸ்க்கில் இரண்டாவது பாகம் நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு பல்வேறு விதமான பட்டங்களை சக போட்டியாளர்கள் கொடுத்து வருகிறார்கள். அதில் தங்களுக்கு வரும் பட்டங்களை நினைத்து யாரும் வருத்தப்படாமல் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்வதை பார்க்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் சந்தேகமாக இருக்கிறது என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சர்ச்சை இவருக்கு சட்டை மாதிரி எனும் பட்டத்தை வனிதாவுக்கு வழங்கியிருக்கின்றனர். இதை கேட்டதும் வனிதா இவ்வளவுதானா!!??இது நல்லா இருக்கே...லவ் யூ என்று கூறியிருக்கிறார்.

இது வேற லெவல் பட்டம்
வனிதாவை தொடர்ந்து இந்த வீட்டில் சகுனி யாரென்று அனிதா சொல்லவும் சுரேஷ் சக்கரவர்த்தி நான்தான் என்று கையை தூக்கி இருக்கிறார். உடனே வாங்க என்று அழைத்து அவருக்கு அந்தப் பட்டத்தை கொடுத்ததுள்ளார்கள். இருப்பதிலேயே சிறந்த அவார்டு என்றால் இதுதான் என்று அவர் அதை மனப்பூர்வமாக வாங்கி இருக்கிறார். விஷ பாட்டில் பட்டம் யாருக்கு தெரியுமா என்று அனிதா கேள்வி எழுப்ப அதை தாமரைச்செல்வி பெயரை சொல்வதற்காக வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு அந்தப் பெயர் படிக்கத் தெரியாததால் அவருடைய காதில் அனிதா கூறியிருக்கிறார். அனிதா கூறியதை கேட்டதும் நீங்களா என்று தாமரைச்செல்வி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆமாம் எனக்குதான் என்று அனிதா கூறியிருக்கிறார். இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்டுகளையும் பாசிட்டிவாக போட்டியாளர்கள் சிரித்தபடியே வாங்குவதை பார்க்கும்போது இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications