அக்ஷராவை டார்கெட் செய்து டாஸ்க் கொடுக்கிறாரா சிபி?? அக்ஷராவின் ரசிகர்களின் கருத்து
சென்னை: அக்ஷராவின் கோபம் நியாயமானது தான் என்று அக்ஷராவின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
டாஸ்க் என்கிற பெயரில் அக்ஷராவை தான் சிபி அதிகமாக டார்கெட் செய்கிறார் என்று அக்ஷராவின் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்.
அக்ஷராவின் ரசிகர்களின் கருத்துக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் புதியதாக இருந்தாலும் அந்த டாஸ்க்கில் தவறாமல் ஒருசில போட்டியாளர்கள் பிரச்சனையை தொடங்கிவிடுகிறார்கள். இந்த ஐந்தாவது சீசன் தொடங்கிய நாளில் இருந்து இப்ப வரைக்கும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிரச்சினைகள் பஞ்சமில்லாமல் தான் வெடித்து வருகிறது. ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தவர்கள் இப்போ எதை செய்தாலும் குற்றம் என்று சொல்லும் அளவில் செயல்பட்டு வருகிறார்கள்.

அக்ஷராவிற்கு அதிகரித்த ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடல் அழகியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷராவிற்கு தற்போது தமிழ் ரசிகர்கள் பலர் உருவாகி விட்டனர். ரசிகர்கள் அவருக்கு ஃபேன்ஸ் பேஜ்களை உருவாக்கி ஆதரவு கொடுத்து ஒவ்வொரு முறையும் அவருடைய பெயர் எலிமினேஷனில் வந்தாலும் ரசிகர்களின் ஓட்டு வாக்குகளால் அவர் பாதுகாக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஒரு சில நேரங்களில் இவர் நடந்து கொள்வது பல ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. அதுபோலத்தான் தற்போதைய கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் கூட ஒரு சிலர் இவர் மீது கடுப்பில் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அக்ஷராவின் ரசிகர்களின் குற்றசாட்டு
வெள்ளித் திரையில் அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பெயர் வாங்காமல் இருந்த சிபி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிபி மற்றும் அக்ஷரா இடையே அடிக்கடி சண்டை மோதல்கள் வெடித்து கொண்டே இருக்கிறது. இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருப்பது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போது அக்ஷரா விஷயத்தில் சிபி நடந்து கொண்டது தவறு என்று அக்ஷராவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video

டாஸ்க்கால் வந்த வினை
கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் பள்ளி மாணவியாக இருக்கும் அக்ஷராவிடம் வார்டனாக இருக்கும் சிபி அதிகமாக கண்டிப்புகளை காட்டிக் கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் அக்ஷராவிற்கு மட்டும் அதிகமா டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய பிரச்சனையில் கூட டாஸ்க்கிற்கு கிளம்புவதற்கு முன்பு அவருக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க ராஜுவுக்கு சிபி அறிவுறுத்தியிருக்கிறார். டாஸ்க் என்றாலும் ஒரு வரைமுறை இல்லாமல் இப்படியா காலை எழுந்ததும் இவர் திருக்குறளை பாடம் படிக்கச் சொல்லிக் கொடுப்பது என்று ஒரு சிலர் அக்ஷராவிற்கு ஆதரவாக கேள்விகளை கிளப்பி இருக்கின்றனர். ஐக்கி, வருண், நிரூப் போன்றவர்களை சிபி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அக்ஷராவை மட்டும் அடிக்கடி பனிஷ்மென்ட் கொடுப்பதால் தான் அவர் அந்த அளவிற்கு கோபப்பட்டு இருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications