வண்டை வண்டையாய் மணிமேகலையை திட்டிய போட்டியாளர்.. கடுப்பில் மணிமேகலை எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலையை சக போட்டியாளர் பேசியதை பார்த்து ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோவில் சக போட்டியாளர் சாதாரண கருவேப்பில்லைக்காக திட்டியதால் கடுப்பில் மணிமேகலை இருந்து வருகிறார்.

ஜாலியான நிகழ்ச்சி

ஜாலியான நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஞாயிறு இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி ஜாலியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேற லெவல் இருந்து வருகிறது.

மொத்த போட்டியாளர்கள்

மொத்த போட்டியாளர்கள்

காமெடி, கலாட்டா, நட்பு, காதல் என எல்லா வகையான கண்டென்ட் கிடைக்கிற ஒரு இடமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும் காரணத்தினால் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதில் பழைய கோமாளிகள் பாலா, சிவாங்கி, மணிமேகலை,சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரோஷி, பரத், சீத்தல், அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் புதிய குக்காக கிரேஸ் கருணாஸ், மனோபாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கருவேப்பிலை பஞ்சாயத்து

கருவேப்பிலை பஞ்சாயத்து

வழக்கம்போல இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்தின் நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் மணிமேகலையை அதிர்ச்சி அருண் திட்டி இருக்கிறார். அதாவது அருண் கருவேப்பிலையை தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது மணிமேகலை அனைத்து கருவேப்பிலையும் தன் இடம் வைத்துள்ளார். அதை பார்த்த அருண் நீயே எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டா நாங்க எல்லாம் என்ன கேனையா என்று கேட்கிறார். அதற்கு மணிமேகலை என்னடா இப்படி வண்டை வண்டையா கேக்குறீங்க என்று கேட்டிருக்கிறார்.

 கடுப்பான மணிமேகலை

கடுப்பான மணிமேகலை

ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களில் ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொள்வது ஒன்றும் புதியதல்ல. இருந்தாலும் இப்படி கருவேப்பிலைக்காக அதிர்ச்சி அருண் மணிமேகலை திட்டியதை பார்த்ததும் மணிமேகலை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரோடு இந்த வாரம் இருக்கும் மனோபாலா விடம் என்னை இப்படி திட்டுகிறார் கொஞ்சமாவது பொறுப்பா என்னன்னு கேக்குறங்களா?? என்று கூறியிருக்கிறார். அதற்கு மனோபாலா அவரிடம் நான் பேசும் நேரத்தில் நான் சமையல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாக மணிமேகலை ரொம்ப நல்லா இருக்கு என்று கூறியிருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+