CWC: பிக்பாஸ் 9 முடிந்ததும் குக் வித் கோமாளி 7.. எப்போது தொடங்கும்? பங்கேற்போர் யார்? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் இரண்டு நிகழ்ச்சிகள் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி. சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 9 நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 7 எப்போது ஆரம்பிக்கப் போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9, கடந்த ஜனவரி 18ஆம் தேதி முடிவடைந்தது. இந்த சீசனில் சீரியல் நடிகை திவ்யா கணேஷ் வெற்றிபெற்று டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ரன்னர்-அப் பட்டத்தை சபரீசன் கைப்பற்றினார். இந்த சீசன் முடிந்ததும், வழக்கம்போல் அடுத்ததாக குக் வித் கோமாளி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குக் வித் கோமாளி
இதற்கு முன் வந்த சீசன்களைப் பார்த்தால், பிக்பாஸ் முடிந்த சில மாதங்களுக்கு பிறகே குக் வித் கோமாளி ஆரம்பமாகும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 முடிந்த பிறகு, நவம்பர் மாதத்தில் குக் வித் கோமாளி முதல் சீசன் தொடங்கப்பட்டது. அதுபோலவே, சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 8 கடந்த 2025 ஜனவரி 19ஆம் தேதி முடிந்ததும், குக் வித் கோமாளி சீசன் 6 மே 4ஆம் தேதி ஆரம்பமானது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளி இருந்தது.
இந்த முறையும் அதே மாதிரியான கால இடைவெளி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 9 முடிந்து தற்போது ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் குக் வித் கோமாளி சீசன் 7 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, மே மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு வரலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகள், போட்டியாளர்கள் தேர்வு போன்றவை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

யார் யார் இந்த சீசனில்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இன்னொரு பலம் அதன் நடுவர்கள் மற்றும் கோமாளிகள் தான். கடந்த ஆறு சீசன்களாக செஃப் தாமு தொடர்ந்து நடுவராக இருந்து வருகிறார். 5வது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் முக்கிய முகமாக இருக்கிறார். கடந்த சீசனில் இணைந்த செஃப் கௌசிக் சங்கரும் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த மூவரும் சீசன் 7லிலும் தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், கோமாளிகளாக வரும் புகழ், குரேஷி, சுனிதா, சரத் போன்ற முகங்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர்கள். இவர்களில் சிலர் இந்த சீசனிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சமீபத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சில போட்டியாளர்கள், சீரியல் நடிகர், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள் ஆகியோர் குக் வித் கோமாளி மேடையில் களமிறங்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
குக் வித் கோமாளி ஒரு சமையல் நிகழ்ச்சி மட்டும் அல்ல. நகைச்சுவை, போட்டி, நட்பு, சில நேரங்களில் உணர்ச்சி கலந்த தருணங்கள் என குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பதே இதன் பெரிய பலம். அதனாலேயே ஒவ்வொரு சீசன் முடிந்ததும், அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.
பிக்பாஸ் 9 முடிந்து, தற்போது தொலைக்காட்சியில் பெரிய அளவிலான ரியாலிட்டி ஷோ இல்லாத சூழ்நிலையில், குக் வித் கோமாளி 7 தான் அடுத்த பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விரைவில் விஜய் டிவி தரப்பில் இருந்து இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications