எதிரி இல்லைன்னா..என்ன அர்த்தம் தெரியுமா.. குட்டைக் கவுனில் சூப்பராக விளக்கிய தர்ஷா!
சென்னை : புள்ளி போட்ட உடையில் ரசிகர்களின் மனதை கிள்ளி எடுத்து விட்டார் தர்ஷா குப்தா.
மாடர்ன் உடையில் மீண்டும் பரவசத்தை தூண்டும் தர்ஷா குப்தாவை பார்த்து ஏங்கி போன ரசிகர்களுக்கு சூப்பராக அதில் ஒரு மெசேஜ் போட்டுள்ளார் தர்ஷா குப்தா.
இதுவரைக்கும் இவரைப் பார்த்து கவிதைகள் பாடிய ரசிகர்கள் இப்போ இவரது தத்துவத்தைப் பாரத்து கமெண்டுகளாக கொட்டுகிறார்கள் .

பார்வையை தவிர்த்த தர்ஷா
பார்க்கும் பார்வையிலே பரவசத்தை ஊட்டும் தர்ஷா குப்தா இப்போ ரசிகர்களின் கேள்விகளை செவி கொடுக்காமல் எங்கோ பார்த்து ஏங்க வைக்கிறாராம். இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை மழை போல பொழிகிறார்கள். அதிலும் பலருடைய வருத்தங்கள் தான் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டிவ் தான். இவருடைய இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோவர்ஸ் இவரை தினமும் பார்க்க தவம் கிடக்கின்றனர். ரசிகர்களின் ஆசைக்காக இவரும் விதவிதமாக போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார்.

இனி இவர் இல்லையா
சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் இவரை தினமும் சீரியலில் பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். ஆனாலும் அதற்கான காரணம் இன்னும் தெரியாமல்தான் பலர் புலம்பி வருகின்றனர். என்னவாயிருக்கும் என்று தான் அவர்களுக்குள்ளே குழப்பத்தோடு இன்ஸ்டாகிராம் போஸ்டில் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இதற்கு முன்னரெல்லாம் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டால் அவருக்கு கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு மறக்காமல் பதில் அளித்து விடுவார். இல்லை என்றால் ஒரு லைக் ஆவது போடுவார். ஆனால் இப்போது கண்டுகொள்ளவே இல்லை என்று பலர் அழாத குறையாக ஏங்கி வருகின்றனர்.

வேதனையில் ரசிகர்கள்
இவ்வளவு நாளாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த இவர் இப்போ வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். இது இவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் இவருடைய வெற்றியை தன்னுடைய வெற்றியாக சந்தோஷமாக கொண்டாடினர்கள். ஆனால் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் இருந்து இவர் வெளியேறிவிட்டார் என்று தெரிந்ததும் தன் வீட்டில் உள்ள பெண் திருமணம் முடிந்து அடுத்த வீட்டிற்கு சென்றால் எப்படி மனது வேதனைப்படும் அந்த அளவுக்கு வேதனையோடு கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

வாடி போன ரசிகர்கள்
இவர் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு கிளம்பி இருப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு விட்டாலும் இவரை இனி தினமும் பார்க்க முடியாதே என்பது தான் பலருடைய கவலையாக இருந்து வருகிறது. அதனால் தான் இனி கிடைக்கும் நேரமெல்லாம் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போடுங்கள் என்று கெஞ்சி வருகின்றனர். ரசிகர்களின் கமெண்டுகளை பார்க்கும்போது இவர் மீது எந்த அளவிற்கு ரசிகர்கள் பாசம் வைக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி கொண்டாட்டத்திலாவது கலந்து கொள்வீர்களா என குழந்தை போல ஏங்கி வருகின்றனர்.

எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே
பல ரசிகர்கள் இவரிடம் எதற்காக செந்தூரப்பூவே சீரியலில் இருந்து விலகிப் போனீர்கள் என்று கேள்வி கேட்டு வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் கவிதைகளே தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் ,'தொலைவில் நீ சென்றால் தொலைந்து போகிறேன் நானும் உன் நினைவில் 'என்று உருகி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னைப்பற்றி நெகட்டிவ் கமெண்டுகளை போடும் நபர்களுக்கு இவர் இந்த போஸ்டில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் 'எதிரி இல்லை என்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்த்தம்' என ஹார்டின்களை பறக்க விட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் போட்டோவுக்கும் கேப்ஷனுக்கும் சம்பந்தமே இல்லையே அப்போ என்ன நடந்திருக்கும் என்று கமெண்ட்ஸ் களில் அவரவர் கெஸ்ஸிங்களை அள்ளி விடுகிறார்கள். இப்படியே எல்லாரும் புலம்பிகிட்டு இருக்கிறத விடவும் லைவில் வந்து காரணத்தைச் சொல்லி விடலாமே தர்ஷா எனப் பலர் கூறும் அறிவுரைக்கும் பஞ்சமில்லை.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications