Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபுல் டிரஸ்ஸில் வந்து நின்ற தர்ஷா.. "அக்கா ஸ்மைல் க்யூட்டு".. கமெண்ட்களை பொழியும் ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கவலைப்படுவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை..மனநிம்மதி தான் போகப் போகிறது..என்று தர்ஷா குப்தா போட்ட போஸ்ட் பார்த்து அப்படி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லையே என படு ஜாலியாக ரசிகர்கள் பதில் போட்டு இருக்கின்றனர்.

தேவதையாக தர்ஷா குப்தா இருக்கும்போது எந்த கவலையும் எங்கள் மனதில் இருக்காது. இந்த சிரித்த முகத்தை பார்த்தாலே சிந்தனைகள் எல்லாமே தறிகெட்டு ஓடுதே என்று கவிஞர்கள் கவிதையை கொட்ட ஆரம்பித்து விட்டனர்.

தலையில் மல்லிகை பூவோடு, முகத்தில் புன்னகை தவழ காலை வேளையில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவே இருக்காது ஓடிப் போய்விடும் என்று ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் தர்ஷாவுக்கு செம கிராக்கி தான். அதுல ஒருத்தர் அக்கா ஸ்மைல் க்யூட்டுன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.

முகத்தில் அந்தச் சிரிப்பு போதுமே

முகத்தில் அந்தச் சிரிப்பு போதுமே

அடடா... பிங்க் நிற உடையில் ரசிகர்களின் இதயத்தை பிச்சி பிச்சி போட்டு விட்டாராம் தர்ஷா குப்தா. இந்த மாதிரி தலை நிறைய பூவோடும் சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தால் வேலைவெட்டி செய்வது கூட மனசு வராமல் வீட்டிலேயே இருந்து விடுவார்கள் போல. அந்த அளவிற்கு இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் உருகி உருகிக் ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். தன்னுடைய போட்டோவால் மட்டுமல்லாமல் மோட்டிவேஷனல் வார்த்தைகளாலும் ரசிகர்களுக்கு எனர்ஜி கூட்டிக்கொண்டு இருக்கும் இவர், இப்ப லேட்டஸ்ட்டா வெளியிட்ட போட்டோவை பார்த்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கமெண்டகளால் கதிகலங்க வைத்து வருகின்றனர்.

டிக் டாக் போனாலும் இன்ஸ்டாகிராம் இருக்கு

டிக் டாக் போனாலும் இன்ஸ்டாகிராம் இருக்கு

இவர் சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் அதிக அளவு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தது இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளத்தின் மூலமாகத்தான். டிக்டாக்கில் இவர் பாவாடை தாவணி கட்டிக்கொண்டு போட்ட முதல் வீடியோவே வைரல் ஆன நிலையில் டிக்டாக் நடைமுறையில் இருந்த கடைசி நாள் வரைக்கும் அதில் போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்டார். தற்போது தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இதிலும் போட்டோக்களையும ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு இணையாக கலக்கி வருகிறார்.

எங்க போனாலும் ரசிகர்கள் சப்போர்ட் இருக்கு

எங்க போனாலும் ரசிகர்கள் சப்போர்ட் இருக்கு

இவர் என்னதான் சீரியல் நடிகையாக களமிறங்கி இருந்தாலும் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து அங்கேயும் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்காக இவர் சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஆக்டிவாகவே இருந்துவருகிறார். எந்த வேலைக்கு போனாலும் வந்த நிலையை மறந்து விடாத இவருடைய மனதினை பார்த்து அவருடைய ரசிகர்கள் மெச்சி வருகின்றனர். சும்மாவே இவருக்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்களை வைத்திருக்கின்றனர். இப்போது வெள்ளித்திரைக்கு போனதும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

வெறுப்பவர்கள் போகட்டும்

வெறுப்பவர்கள் போகட்டும்

என்னதான் பலருக்கும் ஒருவரை பிடித்து இருந்தாலும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் தான் இருக்கிறது. கையில் இருக்கும் ஐந்து விரல்கள் கூட எல்லாமே ஒன்று போல இருப்பதில்லை. அதனால் உலகத்தில் இருக்கும் ரசிகர்கள் எந்த மாதிரி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை என தத்துவத்தை உதிர்த்திருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டும் பதில்களை கூறி வருகிறார். இதற்கு முன்பு இவர் சீரியலில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் போது ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் தனக்கு கமெண்ட் போடும் ரசிகர்கள் அனைவருக்கும் லைக்களையும், கமெண்ட்களையும் போட்டு வந்த இவர் தற்போது ரொம்பவே பிசியாக மாறிவிட்டதும் அந்த மாதிரி செய்ய முடியவில்லை என்று ஃபீல் பண்ணி இருக்கிறார்.

Recommended Video

    Cook with comali Dharsha Gupta செய்த பாராட்டுக்குரிய செயல் | Help Hungers
    எதிலும் சிறப்பு தான்

    எதிலும் சிறப்பு தான்

    இவர் இதுவரைக்கும் மாடர்ன் உடையிலும் புடவையிலும் பாவாடை தாவணியில் விதவிதமாக போட்டோ போஸ்ட்களை எடுத்து குவித்து இருந்தாலும் இப்போது சிம்பிளாக வந்தாலும் அழகு தேவதைதான் என்று கூறும் வகையில் பிங்க் நிற உடையில் பார்ப்பவர்களை பரவசமடைய வைத்திருக்கிறார். இந்த மாதிரி இவர் பார்த்து சிரித்தாள் எப்படி தான் ரசிகர்களால் போட்டோவை தள்ளிவிட்டுப் போக முடியும். அதனால்தான் பலர் இந்த போட்டோவை அப்படியே தங்களுடைய டீபிகளில் வைத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் இந்த போட்டோவுக்கு இவருடைய ரசிகர்களும் கவிதைகளைக் கொட்ட ஆரம்பித்து விட்டனர். இவருடைய தயவினால் சாதாரண ரசிகர்கள் கூட.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+