Mari Selvaraj: விஜய்யுடன் சேர்ந்து அரசியல் பயணம்! மாரி செல்வராஜ் கொடுத்த ரியாக்ஷன்! இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அரசியலில் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்களா? அவருடன் சேர்ந்து பயணிப்பீங்களா? என்ற கேள்விக்கு எதிர்பார்க்காத செயலை செய்து இருக்கிறார்.
சினிமாவில் உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய மாரி செல்வராஜ் இன்று வெற்றி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி கொண்டிருக்கிறது. இதனாலேயே இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காக நடிகர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலேயும் சாதி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார் என்ற விமர்சனங்களும் இருக்கிறது. அதுபோல தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு, நான் பட்ட வலியை தான் இதில் சொல்கிறேன் என்று மாரி செல்வராஜ் பதிலடியும் கொடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.
அப்போது மாரி செல்வராஜிடம், நீங்கள் அரசியலில் வருவீர்களா என்று கேட்டதற்கு நான் அரசியலை எட்டு வயதிலேயே தொடங்கி விட்டேன். எங்கள் வீட்டு சுவற்றில் எல்லாம் தலைவர் வாழ்க என்று எழுத தொடங்கி விட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அவமானங்கள் பிரச்சனைகள் என்னுடைய வேதனையை சொல்வதற்காக தான் சினிமாவிற்குள் வந்தேன்.
ஆனால் இப்போது அரசியலை விட்டு விலகி இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். பிறகு ரீ- ரிலீஸ் செய்யப்படும் படங்கள் பற்றி கேட்டதற்கு தியேட்டரில் எந்த படங்களாவது ஓடிக் கொண்டிருக்க வேண்டும் படங்கள் இல்லை என்று தியேட்டர் மூடி வைக்க கூடாது. வீட்டில் கூட நாம் படம் பார்க்கும்போது திடீரென பழைய படங்கள் வரும் அந்த படம் ஏற்கனவே பார்த்ததாக இருந்தாலும் அதை மீண்டும் நாம் பார்ப்போமே.
அதேபோல இப்போது தியேட்டரில் இந்த படங்கள் ரீ ரீலீஸ் செய்யப்பட்டால் அதுவும் நல்லது தான். பொதுவாக இப்போ ஒரு வாரமாக பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்த நேரத்தில் தியேட்டரை மூடி வைக்க முடியாது அதற்கு ரீ ரிலீஸ் படங்கள் வருவது நல்லது தான் என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக அவரிடம் நீங்கள் விஜய் கட்சியை ஆதரிக்கிறீர்களா? விஜய்க்கு ஆதரவு கொடுத்து அவருடன் அரசியலில் பயணிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. உடனே கை கூப்பி கும்பிட்டபடி நான் கிளம்புறேன் என்று அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். எந்த இடத்திலும் மாரி செல்வராஜ் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் இப்போது இந்த கேள்விக்கு இப்படி ஓடிப் போய்விட்டாரே என்று சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் மாரி செல்வராஜ் எந்த கட்சியிலும் இணையாமல் இருந்தாலே நல்லது என்று கமெண்ட் கொடுத்திருக்கின்றனர்.
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications