எல்லோரும் கண்ணு வச்சுட்டாங்க.. அதான் இப்படி ஆகிடிச்சி ரவீந்தர் புலம்பல்.. கோபத்தில் மகாலட்சுமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ரவீந்தர் ஒரு சில நாட்களாக சமூக வலைத்தள பக்கங்களில் தலைகாட்டாமல் இருந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எளிமையாக திருமணத்தை செய்து சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரவீந்தர் வாழ்க்கையில் இந்த ஒரு வாரம் கஷ்டமாக இருந்துள்ளதாம்.

பலரும் கண் வைத்து விட்டதால்தான் தனக்கு ஒரு வாரம் இப்படி உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர்

தயாரிப்பாளர் ரவீந்தர் லிப்ரா ப்ரோடுக்ஷன் எனும் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் நலனும் நந்தினியும், தொலைநோக்கு பார்வை, கல்யாணம் மற்றும் முருங்கக்காய் சிப்ஸ் என ஒரு சில திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றார். இவருடைய முதல் திரைப்படம் மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்பது தானாம். தயாரிப்பாளராக பலருக்கும் பரிச்சயமான இவர் பொதுமக்களிடம் பிரபலமானது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து தான்.

பிக் பாஸ் ரிவ்யூவால் பிரபலம்

பிக் பாஸ் ரிவ்யூவால் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன் ஒளிபரப்பாகி வரும் போது அதை குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் இவர் ரிவ்யூ செய்து வருகிறார். இவர் ரிவ்யூ செய்வதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில நெட்டிசன்கள் இவருடைய உடல் பருமனை குறித்து அதில் பங்கமாக கலாய்த்து வருவது உண்டு. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எப்போதும் நகைச்சுவையாக பேசி வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எளிமையான திருமணம்

எளிமையான திருமணம்

ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆகி இருந்த ரவீந்தர் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை எளிமையாக திருப்பதி கோயிலில் செய்திருந்தார். அவருடைய திருமண புகைப்படங்களை பார்த்ததும் நெட்டிசன்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்த்து இவரை ட்ரெண்டிங் ஜோடியாக மாற்றி விட்டனர். திருமணத்திற்கு பிறகும் ரவீந்தர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். தன்னுடைய காதல் மனைவியான மகாலட்சுமியோடு எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இவருடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் இடம் பிடித்து வருகிறது.

மகாலட்சுமியின் கோபத்திற்கான காரணம்

மகாலட்சுமியின் கோபத்திற்கான காரணம்

தற்போதைய பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் இவர் முதல் வாரம் ரிவ்யூ செய்யவில்லை என்று இவருடைய ரசிகர்கள் இவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் இவர் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகிவிட்டதாகவும் ,மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்ததால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ரிவ்யூ செய்ய முடியவில்லை என்று கூறி இருக்கிறார். பலரும் தன்னை பார்த்து கண்ணு வைத்ததால் தான் தனக்கு இப்படி நிலைமை ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு முன்பு மகாலட்சுமி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்வதற்கு உட்கார்ந்து விட்டார், ரவீந்தர் யார் போன் பண்ணுணாலும் எடுத்து பேசவே மாட்டார். என்னை கண்டுக்கவே மாட்டார் என்று கூறியிருக்கிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி நீங்கள் ரிவ்யூ செய்ய கூடாது என்று அன்பு கட்டளை இட்டிருந்தாராம். ஆனால் இப்போது மீண்டும் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய இருப்பதால் மகாலட்சுமி கோபத்தில் இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+