எதிர்நீச்சல் சீரியல் நெகட்டிவ் கருத்துகளுக்கு இயக்குனர் கூறிய பதில்..அட இவ்வளவு இருக்கா..??

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் அடிமைப்படுத்துவதாக வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு அதன் இயக்குனரான திருச்செல்வம் பதில் அளித்துள்ளார்.

சன் டிவியில் ஏற்கனவே கோலங்கள் போன்ற பல ஹிட்டான சீரியல்கள் எடுத்திருந்த திருச்செல்வம் மீண்டும் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார்.

பெண்களை வீட்டிற்குள் வைப்பது எனது நோக்கம் அல்ல அப்படி அடைக்கப்படும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது என்று மேலும் பல தகவல்களையும் கூறியுள்ளார்.

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனாலே இந்த சீரியல் டிஆர்பி யில் முதன்மையான இடத்திற்கு வந்துவிட்டது. சீரியல் தொடங்கி ஒரு சில வாரங்கள் மட்டுமே ஆன நிலையில் இந்த வளர்ச்சி சிறப்பு தான் என்று சீரியல் தரப்பினர்கள் கூறி வருகின்றனர். இது திருச்செல்வம் இயக்கம் சீரியல் என்பது ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலை எதிர்பார்க்க தூண்டிய மேலும் ஒரு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

கோலங்கள் தொல்காப்பியன்

கோலங்கள் தொல்காப்பியன்

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களின் இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் திருச்செல்வம் கோலங்கள், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் மூலமாக இணை இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கோலங்கள் சீரியலில் தேவயானி உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த சீரியலில் தேவயானி அபி கேரக்டரில் நடித்திருந்தார். அவருக்கு நண்பனாக தொல்காப்பியன் கேரக்டரில் திருச்செல்வம் நடித்திருந்தார். தொடர்ந்து இந்த சீரியல் ஆறு வருடங்கள் ஒளிபரப்பாகிது.

மீண்டும் சன் டிவியில் அறிமுகம்

மீண்டும் சன் டிவியில் அறிமுகம்

கோலங்கள் சீரியல் மூலமாக இவர் தொல்காப்பியன் கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த சாதனையாளர், சிறந்த நெடுந்தொடர், சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர் என பல விருதுகளை வாங்கியுள்ளார். நெடு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சன் டிவியில் திருச்செல்வம் இயக்கம் சீரியல் வரப்போகிறது என்றதும் இவருடைய ரசிகர்கள் இந்த சீரியலுக்காக எதிர்பார்க்க தொடங்கி விட்டார்கள். தற்போது எதிர்பார்ப்பு குறையாமல் சீரியலின் விறுவிறுப்பு அதிகரித்து இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில நெட்டிசன்கள் இந்த சீரியலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அனுபவ கதை

அனுபவ கதை

நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திருச்செல்வம் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் பல ரசிகர்கள் என்னிடம் எதற்காக சீரியலில் படித்த பெண்களை வீட்டில் சமையல் அறைக்குள்ளே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள் என்றும் இந்த மாதிரி எல்லாம் இப்போ நடக்கிறதா??என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் நடக்கிறது. பெரும்பாலும் நகர்புறங்களில் குறைவு என்று சொல்வதை விடவும், அழுத்தம் கொடுப்பது என்பது நீ செய் என்று கொடுப்பது இல்லை. செய்ய வைக்கிறது. பெண்களை அந்த மாதிரி செய்ய வைக்கிற சூழ்நிலையில் தள்ளுவது. அதுவும் ஒரு விதத்தில் அழுத்தம் தான். கிராமப்புறங்களில் இப்பவும் நிறைய இருக்கிறது. படித்த பெண்கள் இப்படி நிலைமை இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் இருந்து தான் இப்படி கதை எடுத்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

ஆட்டம் ஆரம்பம்

ஆட்டம் ஆரம்பம்

பொதுவாக பெண்கள் செய்ய மாட்டேன் என்று கூறி செய்வதல்ல. ஏன் அவர்கள் இந்த மாதிரி வேலைகளை செய்ய வேண்டும் என்று ஆண்கள் புகுத்துகிறார்கள் அல்லது மற்றவர்கள் புகுத்துகிறார்கள் என்பதை சொல்லும் ஒரு களம் தான் இந்த சீரியல். எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. இது எதை நோக்கி தொடர்கிறது என்றால் அந்தப் பெண்கள் அழுத்தத்தில் இருந்து வெளியேறி சாதிக்கப் போவதை பற்றிது தான். இது எங்க வீட்டிலும் நான் பார்த்த பல பெண்களுக்கும் நடந்தது தான். அதைப்பற்றி தான் இந்த சீரியலில் எடுத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்ததும் சீரியல் ரசிகர்கள் அப்போ ஜனனி இனி தனது ஆட்டத்தை தொடங்கி விடுவாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+