எதிர்நீச்சல்: ஆட்டத்தை தொடங்கிய ஈஸ்வரி... ஆடி போன குணசேகரன்.. முதல் முறை செய்த சிறப்பான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்து வந்திருந்த பல திருப்பங்கள் நிகழத் தொடங்கியிருக்கிறது.

பல நாட்களாக இந்த சீரியலில் ஈஸ்வரி எப்போது தன்னுடைய உரிமையை பேச ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று நல்ல விருந்து கிடைத்திருக்கிறது.

எதிர்நீச்சல் எப்போது தொடங்கும்

எதிர்நீச்சல் எப்போது தொடங்கும்

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி ஆர் பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஆரம்பமாகி ஒரு சில மாதங்கள் தான் ஆகின்றது ஆனாலும் இந்த சீரியலில் அடிமைகளாக நடத்தப்படும் பெண் மருமகள்கள் எப்போது அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்த்து எதிர் நீச்சல் அடிக்கப் போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே வீட்டில் கடைசி மருமகளாக இருந்த ஜனனி வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில் பட்டம்மாள் பாட்டியால் மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என அவர் புது புது முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருக்கும் மீதமுள்ள மூன்று மருமகள்களும் அமைதியாகவே இருக்கின்றனர்.

எதுவும் பேசவில்லையே

எதுவும் பேசவில்லையே

தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தனியாக அமர்ந்து கொண்டு அழுவது மாறி மாறி இருவர் பேசிக் கொண்டிருப்பது என இப்படியே காலத்தை தள்ளிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது ரசிகர்கள் பலரும் இவர்களும் வாழ்க்கையை நோக்கி எதிர்நீச்சல் போட தொடங்கினால் சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அது மட்டும் அல்லாமல் ஒரு சில எபிசோடுகளுக்கு முன்பு ஈஸ்வரி மற்றும் குணசேகரின் மகன் காலேஜுக்கு சரியாக வரவில்லை என்று மெயில் வந்த நிலையில் அதை படித்து பார்த்ததற்காக தர்ஷனுக்கு ஆதரவாக குணசேகரன் தர்ஷினியை திட்டி இருப்பார். அப்போது கூட ரேணுகா எதுவுமே பேசாமல் அமைதியாக தான் இருப்பார் அதை குறித்து ரசிகர்கள் அதிகமாக திட்டி வந்தனர்.

டீச்சருக்கு கிடைக்கும் மரியாதை

டீச்சருக்கு கிடைக்கும் மரியாதை

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வில் உன்னை ஸ்கூல் காலேஜுக்கு வரச் சொன்னது பொம்பள டீச்சரா? என்று குணசேகரன் கேட்க, அதற்கு ஆமாம் அதுதான் எனக்கு கடுப்பாக இருக்கிறது என தர்ஷன் சொல்ல, குணசேகரனின் அம்மா அவங்கள எல்லாம் எப்படிடா டீச்சரா போட்டாங்க? என்று கேட்கிறார். பின்பு ரேணுகாவை கூப்பிட்டு குணசேகரன் இவன் காலேஜில் ஏதோ வேலையாம். கூட போயிட்டு வா என்று சொல்கிறார். அதற்கு ரேணுகா என்னால போக முடியாது என்று சொல்கிறார்.

இந்த பளார் போதுமா

இந்த பளார் போதுமா

அனைவரும் முன்னிலையிலும் முதல் முறையாக ரேணுகா எதிர்த்து பேசுவதை பார்த்து தர்ஷன் ரேணுகாவின் அருகில் சென்று நீயும் எதிர்த்து பேசாமல் பொம்பளையா சொன்னதை செய் என்று சொல்ல, பளார் என்று ரேணுகா தர்ஷன் கன்னத்தில் அரைகிறார். தர்ஷன் பேசுவதையும் வீட்டில் நடப்பதை எல்லாம் மாடியில் இருந்து ஜனனியும் அப்பத்தாவும் பார்த்துக் கொண்டிருக்க ரேணுகாவின் எதிர்பாராத செய்யலை பார்த்து சூப்பர் என்று இருவரும் கூறுகின்றனர். குணசேகரன் இதை பார்த்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டு கம்பீரமாகவே நிற்கிறார்.

கனவாக இருந்து விடக் கூடாது

கனவாக இருந்து விடக் கூடாது

குணசேகரனின் அம்மா விசாலாட்சி எதுவுமே பேசாமல் தலையை குனிந்தபடி இருக்கிறார். இந்த பிரமோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. அடிக்கடி ரசிகர்கள் எப்போது ரேணுகா வாய் திறப்பார் எப்போதும் தனியாகவே நின்று கொண்டு அமைதியாக இருக்கிறாறே என்று கேள்வி கேட்ட நிலையில் இன்றைய பிரமோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. ஆனாலும் இது கடைசியில் கனவாக இருந்து விடக்கூடாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+