பிக் பாஸ் கவின் கூறிய மகிழ்ச்சியான செய்தி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..காரணம் இரண்டு இருக்காம்..!!
சென்னை:தனது ரசிகர்களை விரைவில் சந்திக்க காத்திருப்பதாக கூறி கவின் ட்வீட் செய்துள்ள போட்டோக்கள் கவின் ரசிகர்கள் மட்டுமின்றி பீஸ்ட் பட நடிகை அபர்ணாதாஸ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது அபிமான நட்சத்திரங்களின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித் தெளித்து வருகின்றனர்.
கவின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களுக்கு கவினை விட அபர்ணாதாஸ்க்கு தான் வாழ்த்துக்கள் குவிகிறது.

பிக் பாஸை ஹிட் ஆக்கிய ஜோடிகள்
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கேரக்டரில் நடித்து ஓரளவிற்கு பிரபலமாகியிருந்த கவின், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக களம் கண்டதன் மூலம் பட்டி தொட்டியெல்லாம் நன்கு பிரபலமானார். பிக் பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவுக்கும் கவினுக்கும் இருந்த லவ் கெமிஸ்ட்ரி பிக் பாஸ் சீசன் 3 ஹிட் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் அழகான காதலர்களாக வலம் வந்த இந்த ஜோடிகள் மீது யார் கண் பட்டதோ..!!?? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு இந்த ஜோடி பிரிந்து விட்டது. இருவருமே பொதுவெளியில் காதலைப் பற்றியும் பிரிவை பற்றியும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

கதாநாயகனாக கவின்
கவின் பிரபல இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராகம் பணியாற்றியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சில படங்களில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கதாநாயகனாக ப்ரோமோஷன் ஆனார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான லிப்ட் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது புது முக இயக்குனர் தினேஷ் பாபு இயக்கத்தில் தாதா என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ட்ரெண்டிங் நடிகை அபர்ணாதாஸ்
தாதா படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணாதாஸ் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜயின் பீஸ்ட் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர். பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தபொழுது விஜய் அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டவர் அபர்ணாதாஸ். போஸ்டரில் அபர்ணாதாஸை பார்த்த ரசிகர்கள் கூகுளில் அவரைப் பற்றிய விவரங்களை தேடி தேடியே அவரை டிரெண்டாக்கினர்.போஸ்டர் அளவிற்கு படத்தில் அவரது கேரக்டர்கள் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. அபர்ணாதாஸ் ரசிகர்களுக்கு அது ஒரு சின்ன ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு
காதல் திரைப்படமாக உருவாகி வரும் டாடா திரைப்படம் அபர்ணாதாஸ் ரசிகர்களுக்கு ம் கவின் ரசிகர்களுக்கும் நல்ல ட்ரீட் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் கவின் பகிர்ந்துள்ள போட்டோக்களுக்கு அவர்களின் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பு அதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.பெரிய இடைவெளிக்குப் பின்பு கவின் மற்றும் அபர்ணாதாஸ் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் தங்கள் வாழ்த்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications