“அதை நான் தெரிஞ்சு பண்ணல” இன்டர்நெட் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.. அசல் வீடியோவிற்கு ரசிகர்கள் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அசல் அவரைப் பற்றி பரவி வந்த மீம்ஸுகளுக்கு பதில் சொல்லும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அசல் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அதை வைத்து கலாய்த்து மீண்டும் மீம்ஸ் களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆணித்தரமான நம்பிக்கை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமான கானா பாடகர் அசல் கோலார் இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேறி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும் போது இவர் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று இவருடைய ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வந்தனர். அதைத்தான் கானா பாடகர் ஆன அசல் கோலாரும் ஆணித்தரமாக நம்பி வந்தார்.

ரசிகர்களை காண்டாக்கிய அசல்
அதனால் தான் கடைசி நேரத்தில் கமல் அவர் இடம் நீங்கள் வெளியேறுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு கூட, இல்லை நான் இங்கே நிறைய வேலை செய்து இருக்கிறேன். அதனால் என்னை மக்கள் காப்பாற்றுவார்கள் என்று உறுதியாக அசல் கூறியிருந்தார். ஆனால் அசல் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளிலிருந்து சகப் பெண் போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என்று இவரை குறித்து ரசிகர்கள் இவர் மீது அதிகமான காண்டாக இருந்தனர்.

அடித்த லூட்டிக்கு தண்டனை
அசல் கோலார் நிவாவுடன் அடிக்கடி தனியாகவே பேசிக் கொண்டு அவரை கடித்தும் கொஞ்சியப்படி இருந்தது வெளியே அதிகமாக காட்டப்பட்டு வந்தது. அது போல குயின்சி, ரட்சிதா மைனா நந்தினி, மகேஸ்வரி என பல பெண் போட்டியாளர்களிடம் அசல் அடிக்கடி தடவிக் கொண்டும் ,மடியில் படுத்து கொஞ்சியப்படி இருந்தார். இதை பார்த்து காண்டான ரசிகர்கள் பலர் இவர் வெளியே வரவேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர் .இந்த நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். நிகழ்ச்சியை வெளியேறும் போது கூட இவர் எதற்காக வெளியே செல்கிறோம் என்பது தெரியாமல் தான் இவர் இருந்து வந்தார்.

அப்படி ஒன்னும் செய்யலையாம்
பிக் பாஸ் விட்டு வெளியேறும் போது கமல் இவரிடம் நீங்கள் எதற்காக வெளியே செல்கிறீர்கள் என்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள் என்று கூறிய அனுப்பி வைத்தார். அப்போது கூட குழப்பமான மனநிலையோடு அசல் வெளியேறி இருந்தார். தற்போது ஒரு சில நாட்கள் கழித்து அதை குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் .அதில் உள்ளே நான் செய்ததை தவறாக வெளியே காட்டி இருக்கின்றனர் .அதை தவறாக புரிந்து கொண்ட ரசிகர்கள் என்னைப் பற்றி அதிகமாக மீம்ஸ் களில் கலாய்த்து வந்தனர்.

நம்புற மாதிரி இல்லையே பாஸ்
மீம்ஸ்களில் காட்டுவது எல்லாம் நான் தெரிந்து செய்தது அல்ல எதார்த்தமாக அனைவரிடமும் பழகிக் கொண்டு இருந்தேன். நான் பெண் போட்டியாளர்களிடம் மட்டுமல்லாமல் சக ஆண் போட்டியாளர்களிடமும் பேசி பழகித்தான் வந்தேன் .ஆனால் அதை எல்லாம் அதிகமாக காட்டப்படவில்லை. போட்டிகளில் நான் என்னுடைய வேலையை சரியாக செய்தேன். அதுவும் தப்பாகத் தான் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது .வெளியே வந்து நான் இன்டர்நெட்டில் இதை பார்த்ததும் மனது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்படி இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய எதார்த்தமான செய்கை பலருடைய மனதை காயப்படுத்தி இருக்கிறது. கஷ்டப்படுத்தி இருக்கிறது என்பதை மீம்ஸ் மூலமாக தெரிந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதுவெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? உள்ளே நடப்பதை தான் 24 மணிநேர எபிசோட்டில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதில் ஒரு சில வேண்டும் என்றால் கட் செய்யப்பட்டு இருக்கலாம் .ஆனால் நீங்கள் அங்கே செய்து கொண்டிருந்தது முழுக்க இதுதானே அதனால் அதை நாங்கள் அப்படியே பார்த்துவிட்டோம் .ஆனால் உங்களிடம் அந்த போட்டியாளர்கள் மட்டும் ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்று தான் தெரியவில்லை என்று அசலை கலாய்த்து பதில் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications