மீண்டும் சீரியலுக்கு திரும்பிய சரண்யா துரோடி...எந்த சீரியலில் தெரியுமா?? சந்தோஷத்தில் ரசிகர்கள்
சென்னை: கம்பேக் கொடுத்திருக்கும் சரண்யா துரோடியை பார்த்ததும் ரசிகர்கள் மனது சந்தோசத்தில் துள்ளுகிறது .
மீண்டும் விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்திருக்கும் சரண்யாவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.
சூட்டிங் ஸ்பாட் போட்டோ கிடைத்ததற்கு ஆர்ப்பரிக்க தொடங்கிய ரசிகர்கள், இவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்று தெரியவில்லை என்றாலும் ஆதரவை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

மாஸாக திரும்பிவந்த சரண்யா
எப்படி போனேனோ...! அதைவிட கெத்தா..! மாஸா... வரப்போகிறார் என்று.., சரண்யா நடித்து வரும் புதிய சீரியலின் புரோமோ போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து..!வருகின்றனர். குடும்பப் பெண்கள் மட்டுமின்றி 90'ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை சிவப்பு கம்பளம் விரித்து சரண்யாவின் மறுபிரவேசத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர். தங்கள் அபிமான செலிபிரிட்டி மீண்டும் சின்னத்திரையில் காணப்போகும் ஆர்வத்தில் புரோமோ ஷூட் போட்டோக்களை டிரண்ட் செய்து வருகின்றனர்.

புது சீரியலில் என்ட்ரி
சரண்யாவிற்காகவே.. சேனலை மாற்றாமல் செய்திகளை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம்..! உருவாகும் அளவிற்கு நியூஸ் ரீடர் ஆக கலக்கிய சரண்யாவை.., உங்கள் அழகிற்கும் திறமைக்கும் இருக்க வேண்டிய இடம்.. இது.. இல்லை. என்று தங்களது சேனல் பக்கம் அழைத்துச் சென்ற விஜய் டிவி, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இவரது முகத்தை மறக்க விடாமல் பதிய வைத்தது. பிறகு சன் டிவி..விஜய் டிவி.. என்று மாறி.. மாறி.. சீரியல்களில் நடித்தாலும், விஜய் டிவியின் 'ஆய்த எழுத்து'சீரியல் பின்பு வேறு எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் திடீரென்று பிரேக் எடுத்துக்கொண்டார்.. இதனால் இவரது ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியாகி தான் போயி

உதவி செய்யும் மனம்
சின்னத்திரைக்கு சின்ன கேப் விட்ட சரண்யா வீட்டில் சும்மா இருக்காமல்.. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு...பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். கேமரா சூட்டிங்குக்குத்தான் ரெஸ்ட்..., போன் சூட்டிங்குக்கு எப்பவும் நான்- ஸ்டாப்..தான்..! என்பது போல் போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகவே இருந்து வந்தார். சின்னத்திரையில் இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் சோசஷியல் மீடியாவிலும் இவருக்கு அமோகமான வரவேற்பு அளித்தது..! இவர் போடும் போஸ்ட்களை வைரல் செய்துவந்தது. இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்த ரசிகர்களின் பலம் அறிந்த இவர், பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமின்றி.. சில அழகு சாதன பொருட்கள் விளம்பரம் செய்வதன் மூலமும்..நல்லா கல்லா கட்டி வந்தார்.

போட்டோக்கள் லீக் ஆகிவிட்டது
'ஆடுன காலும்.., பாடுன வாயும் சும்மா இருக்காது..' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் எவ்வளவுதான் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக இருந்து வந்தாலும்.. இவருக்கு ஆரம்பத்தில் 'தாய் கழகம் போல்.. இருந்த சின்னத்திரைக்கு செல்வதற்கு சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார். என்னதான்..! சமூக வலைதளங்களில் தங்கள் அபிமான செலிபிரிட்டியை பார்த்தாலும்...! சின்னத்திரையில் பார்ப்பதுபோல் இருக்குமா..?என்று இவரது ரசிகர்களும் இவரை டிவியில் காண ஆவலோடு வரவேற்று காத்திருந்தனர். 'வெறும் வாயை மென்றவருக்கு.. அவல் பொரி கிடைத்தது..'போல விஜய் டிவியிலே.. 'ரீ-என்ட்ரி' கொடுக்கும் வாய்ப்பும் அமைந்துவிட்டது. தற்போது அதற்கான ப்ரோமோ ஷுட்...' போட்டோக்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வருகிறது...' அநேகமாக பிக்பாஸ் சீசனுக்கு பிறகு இந்த சீரியல் ஒளிபரப்பாக வாய்ப்பிருக்கிறது என்று சீரியல் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்....
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications