பன்றிக்கான உணவுதான் தனக்கும் சாப்பாடு... வெள்ளந்தி பேச்சால் அழ வைத்த தாமரை
சென்னை: கலகலப்பான பேச்சால் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த தாமரைச்செல்வி தற்போது தன்னுடைய கவலையை கூறி அனைவரையும் அழ வைத்திருக்கிறார்.
இளமைக் காலத்தில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்த தாமரைச்செல்விக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தன்னுடைய மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தையும் அவர் திரும்பி வர வேண்டும் என்பதற்காக இவர் பட்ட கஷ்டங்களையும் கூறி அனைவரையும் பீல் பண்ண வைத்துவிட்டார்.

ரசிகர்களை கவர்ந்த குழந்தைத்தனம்
கலகலப்பான பேச்சால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து இருக்கும் தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் யாரென்றே தெரியாவிட்டாலும் தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் ஒரு நாடகக் கலைஞராக இருந்தாலும் குறிப்பிட்ட பகுதிக்குள் தான் இவர் பரிச்சயமான நபராக . ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 10 நாட்களுக்குள் இவருக்காக ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் ஓபன் செய்யும் அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர்.

தொடரும் சோக கதைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து தற்போது வரைக்கும் தங்களுடைய கடந்த கால சோகக் கதையைச் சொல்லி
கொண்டிருப்பது ஒரு டாஸ்க் ஆகவே இருந்து வருகிறது. இதற்கு முன்பு ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அழுது கொண்டிருந்தாலும் தற்போதைய சீசனில் வேற லெவலில் கண்களை குளமாக்கி வருகின்றனர். அவர்களை பார்க்கும் ரசிகர்களையும் தேம்பித் தேம்பி அழ வைத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு ஒருவருக்கு ஒருவர் கதை சலித்தது இல்லை என்று சொல்லும் வகையில் இருந்து வருகிறது.
Recommended Video

வெள்ளந்தியான பேச்சு
தன்னுடைய வெள்ளந்தியான பேச்சாலும், கிராமத்து குழந்தை தனத்தால் அனைவரின் மனதிலும் தனி இடத்தில் இருக்கும் தாமரைச்செல்வி தற்போது தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இவர் முதலாவதாக காதலித்து திருமணம் செய்தது, கணவரின் கொடுமை தாங்காமல் தன்னுடைய முதல் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறியது, அதற்குப்பிறகு பட்ட கஷ்டங்கள், அதற்கு அடுத்ததாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மீண்டும் கஷ்டப்பட்டாலும் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

பன்றி வளர்ப்பு
எவ்வளவோ சிரித்துக் கொண்டே இருக்கும் தாமரைச்செல்விக்குள் இவ்வளவு வேதனைகள் இருக்கிறதா என்று பார்ப்பவர்கள் எல்லாம் புலம்புகிற மாதிரிதான் நேற்று தாமரைச்செல்வி புலம்பித் தீர்த்து விட்டார். தன்னுடைய மகனை பார்த்துவிட வேண்டும் என்றும், அவனை வளர்ப்பதற்காக தான் முதல் கணவரின் வீட்டில் தான் பன்றி வளர்த்ததாகவும், அதற்கு வைக்கும் சாப்பாட்டை தான் சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும், அதற்கு மேலும் அடி உதை தாங்க முடியாமல் தான் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன் ஆனால் தற்போது தன்னுடைய பையனை பார்க்க முடியவில்லை என்று கதறி இருக்கிறார். இவருடைய இந்த சோக கதையை கேட்டு பல ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications