நிரூப்புக்கு விஷம் வைக்க வேண்டும் ...ப்ளான் போடும் அக்ஷரா...பதறும் ரசிகர்கள்
சென்னை: இந்த வார ஆளுமை சக்தி படைத்த நிரூப், அக்ஷராவை பாடாய்ப்படுத்தத் தொடங்கி விட்டார்.
நிரூப்பிற்க்கு இந்த வாரம் நிலத்தின் ஆற்றல் கிடைத்திருப்பதால் அவர் ஆளுமையை தொடங்கிவிட்டார்.
நிரூப்பிடம் இருந்து தப்பிப்பதற்காக அக்ஷரா போட்ட ப்ளான் தான் அனைவரையும் அசர வைத்திருக்கிறது.

நெருப்பு ஆளுமையில் இசைவாணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு காயின் வைத்திருக்கும் நபர் தன்னுடைய ஆளுமையை காட்டத் தொடங்கிவிட்டனர். போன வாரம் முழுக்க நெருப்பின் ஆற்றல் வாரமாக இருந்ததால், அந்த காயினை வைத்து இருந்த இசைவாணி பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில போட்டியாளர்கள் இவர் செய்வது சர்வாதிகாரமாக இருக்கிறது என்று இவருக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தனர். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் பலர் மறுத்துவிட்டனர். இதனால் சில நேரங்களில் இசைவாணி குமுறி கொண்டிருந்தார்.

லிஸ்ட் பெருசா போய்க்கிட்டே இருக்கு
நேற்றைய முதல் நாளில் நிரூப் கைவசம் இருக்கும் நிலத்தின் ஆளுமை இந்த வாரத்தில் ஜொலிக்கப் போகிறது என்று கூறவும், ரொம்பவே குஷியான நிரூப் தன்னுடைய ஆளுமையை முதல் நாளிலிருந்து தொடங்கிவிட்டார். நிரூப்க்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது. அதில் பலரும் எதிர்பார்க்காத ஒரு சலுகையாக அவருக்கு ஒரு அசிஸ்டண்ட், அதுவும் பெண் அசிஸ்டன்ட் நியமித்துக் கொள்ள அனுமதி கிடைத்திருந்தது. அவரிடம்தான் சக போட்டியாளர்கள் பேசவேண்டும் நிரூப்பிடம் எதை கூற வேண்டும் என்றாலும் அசிஸ்டன்ட் இடம் அனுமதி பெற்று தான் பேசவேண்டும் என்றும் பெரிய லிஸ்ட் போட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

கோபம் குறையவில்லை
நிரூ௧ப்பிற்கு கிடைத்த சலுகையை பயன்படுத்தி தனக்கு அசிஸ்டெண்ட் ஆக அக்ஷராவை நியமித்து பழிதீர்க்க தொடங்கிவிட்டார் நிரூப். அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் நான் வெளியே வேணும்னா போகிறேன் என்று அதிரடியாக பதில் கூறிய அக்ஷரா, வருண் கூறிய அட்வைஸால் மனம் மாறி ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு அக்ஷராவும், நிரூப்பும் சமாதானமாக அமர்ந்து பேசி முடிவு எடுத்து கொண்டிருந்தாலும் அக்ஷரா மனதிற்குள் நிரூப்பின் மீது பயங்கர கோபத்தில் தான் இருக்கிறார்.

என்ன ஒரு பிளான்
நிரூப்பிடம் இருந்து தப்பித்துவிட அவருக்கு விஷம் வைத்து விட வேண்டியது தான். அதுவும் பெரிய அண்டா நிறைய வைக்க வேண்டுமென்று அக்ஷரா பேசியது அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. நிரூப் சைஸ்க்கு விஷம் வைக்க வேண்டும் என்றால் அது பெரிய அண்டாவில் கலந்தால் தான் முடியும் என்று இவர் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அக்ஷரா நிரூப் மீது இவ்வளவு கோபமாக இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவர் பேசிய வார்த்தைகளை கேட்டு சிலர் பயந்துதான் போயிருக்கிறார்கள். ஒரு சிலர் விவேக் காமெடியில் வருவது போல, அப்போ நிரூப்க்கு இந்த வாரம் ஒரு பாயாசம் இருக்கிறது என்று கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications