செய்ததை சொல்லி காண்பிக்கும் அண்ணாச்சி...கடுப்பான இசை... என்ன இப்படி மாறிட்டீங்க
சென்னை: தான் காயின் எடுத்துக் கொடுத்ததை அண்ணாச்சி சொல்லி காண்பித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
தலைவர் பதவியில் இருக்கும் இசை தன்னிடம் வேலை வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சர்வாதிகாரம் பண்ணுகிறார் என்று அண்ணாச்சி கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார் இசைவாணி.

நெருப்பு வாரம்
இந்த வாரம் நெருப்பு வாரம் என்றும் நெருப்பு காயினை வைத்திருப்பவர் தான் தலைவர் என்றும் அவருக்கு உரிய மரியாதையையும், தலைவர் பதவியில் இருப்பவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவுறுத்தி உள்ளது. இதனால் தான் நெருப்பு காயினை வைத்திருக்கும் இசைவாணி தற்போது பிக் பாஸின் கட்டளைப்படி நடக்க தொடங்கி இருக்கிறார். இவருடைய பேச்சை சக போட்டியாளர்கள் யாரும் கேட்கவில்லை என்பது இவருடைய ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

காயின் கொடுத்த அண்ணாச்சி
இந்த காயின் டாஸ்க் விளையாட்டில் இசைவாணிக்கு இந்த காயினை எடுத்துக் கொடுத்தது அண்ணாச்சி தான். அவரால் இவர் இந்த தலைமைப்பதவியை இசைவாணி ஏற்று நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் முதல் நாள் இவருக்கு பதவி கொடுத்ததுமே இவரை கலாய்க்க தொடங்கிவிட்டார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் அண்ணாச்சிக்கு பாசிட்டிவ் கமெண்ட்கள் தான் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இவர் இசைவாணியிடம் நடந்துகொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போது இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வர தொடங்கி இருக்கிறது.

இசை வாணியின் முடிவு
நேற்றைய எபிசோடில் அண்ணாச்சியிடம் இசைவாணி பிரிட்ஜை கிளீன் பண்ண சொல்லி இருக்கிறார். ஆனால் அதை பண்ணவில்லை என்று வருத்தத்தில் இசைவாணி அபிநவ் மற்றும் நிரூப்பிடம் அண்ணாச்சியை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. நான் சொல்கிறேன் என்று விட்டுவிட்டார்கள். இந்த நிலையில் தன்னுடைய வேலையை தான் சரியாக பார்க்கவில்லை என்று ஏற்கனவே பிக்பாஸ் இடம் திட்டு வாங்கிய இசைவாணி தன்னுடைய பணியை இனி ஒழுங்காக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அண்ணாச்சிக்கும் நெகட்டிவ் கமெண்டுகள்
நேற்றைய எபிசோடில் தொடக்கத்திலிருந்து இவர் தன்னுடைய வேலைகளை சரியாக பார்க்க தொடங்கியபோது சக போட்டியாளர்கள் இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகின்றனர். தலைவர் பதவியிலிருந்து இவர் சொல்வதை கேட்க அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை அவர்களின் நடவடிக்கை மூலமாக நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுவும் அண்ணாச்சி நேற்றைய எபிசோட்டில் இசை, நீ சர்வாதிகாரம் பண்ணுகிற மாதிரி இருக்கிறது என்று சொன்னதும், இந்த காயின் எப்படி வந்தது என்ன ஞாபகம் இருக்கிறதா என சொன்னதும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இதுவரைக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொண்டிருந்த அண்ணாச்சிக்கு நெகட்டிவ் கமெண்டுகள் அதிகரிக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications